Home
News

ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.49 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.49 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.49 திட்டம் ஆனது மொத்தமாக 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக 2ஜிபி டேட்டாவுடன் 100 நிமிட இலவச குரல் அழைப்புகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள்.

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டேட்டா மறறும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. ஆனால் இந்த திட்டத்தில் 22 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும். அதேபோல் இந்நிறுவனத்தின் ரூ.135 திட்டம் ஆனது பயனர்களுக்கு 1440 நிமிட குரல் அழைப்பு நன்மைகளை 24 நாட்களுக்கு வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 0.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள்எதுவும் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் இலவச PRBT சேவையை சேவையை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் BSNL ட்யூன்களுக்கான அணுகலை வழங்கும் இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்எனஎல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

 பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்எனஎல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
BSNL prepaid plans available for less than Rs.200: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X