Home
News

BSNL வேற லெவல் தான்யா.. Jio, Airtel, Vi-லாம் ஓரம் போ.. தினமும் ரூ. 5 போதும்.. 365 நாள்.. 600GB மாஸ் டேட்டா..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை மலிவு விலையில் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (365 days validity plan) உடன் வழங்குகிறது. கம்மி விலையில் 1 வருட வேலிடிட்டி (BSNL 1 year validity plan) நன்மையை தேடும் வாடிக்கையாளர்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் 600GB டேட்டா நன்மையை வழங்கும் ஒரு அற்புதமான திட்டமாக வெளிவந்துள்ளது. பட்ஜெட்டில் நீண்ட நாள் வேலிடிட்டி திட்டத்தை தேடுவோர் இந்த திட்டத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்ற பிஎஸ்என்எல் (BSNL) தொலைத்தொடர்பு நிறுவனம் இப்போது இந்தியாவில் மலிவு விலையில் நீண்ட நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை அறிமுகம் செய்த மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. காரணம், தனியார் நிறுவனங்கள் அவர்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்ததனால், அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மட்டுமே இப்போது குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.

BSNL வேற லெவல் தான்யா.. Jio, Airtel, Vi-லாம் ஓரம் போ.. ரூ. 5 போதும்

BSNL வேற லெவல் தான்யா.. Jio, Airtel, Vi-லாம் ஓரம் போ.. தினமும் ரூ. 5 போதும்:

BSNL நிறுவனம் இப்போது, 1 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற புதிய திட்டங்களை விளம்பரம் செய்து வருகிறது. 1 வருடம் முழுக்க நன்மைகளை டென்ஷன் இல்லாமல் அனுபவிக்க உதவும் புதிய திட்டத்தை BSNL இப்போது வழங்க துவங்கியுள்ளது. பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்ட பயனர்கள் (BSNL prepaid plan users) இப்போது 2000 ரூபாய் விலைக்குள் 1 வருட திட்டத்தை தேர்வு செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்டம் (BSNL Rs 1999 Plan) என்ற பெயருடன் இந்தியாவில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் இந்த திட்டம் இப்பொது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டம் 1 வருட செல்லுபடியுடன் 365 நாட்களுக்கு வாய்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால், 365 நாட்களுக்கு தினசரி கட்டணமாக நீங்கள் வெறும் 5 ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதுமானது.

பிஎஸ்என்எல் 1999 பிளான் 365 நாட்களுக்கு.. 600GB மாஸ் டேட்டா:

அப்படியென்றால், ஒரு மாதத்திற்கு இந்த திட்டம் வெறும் 150 ரூபாய் என்ற கட்டணத்துடன் உங்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாதாந்திர திட்டங்களை நீங்கள் தேர்வு செய்திருந்தால் கூட, இத்தகைய நன்மைகளை இந்த குறைந்த விலையில் உங்களால் அனுபவித்திருக்க முடியாது. சரி, இந்த பிஎஸ்என்எல் 1999 பிளான் (BSNL 1999 Plan) என்ன நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாம்.

இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை 365 நாட்களுக்கு கிடைக்கும் படி வழங்குகிறது. ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் என்று அணைத்து நெட்வொர்க் அழைப்புகள், லோக்கல், STD மற்றும் நேஷனல் ரோமிங் ஆகிய அனைத்து வாய்ஸ் கால்ஸ் நன்மைகளும் இதில் அடங்கும். இந்த திட்டம் தினசரி டேட்டா நன்மைக்கு பதிலாக மொத்தமாக 600GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

இது தினசரி வரம்பு எதுவும் இல்லாமல் மொத்தமாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்தை நீங்கள் இப்போது ஏப்ரல் மாதத்தில் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும், அடுத்த ஏப்ரல் 2026 வரை எந்தவித தடையுமின்றி வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அணைத்து நன்மைகளையும் அனுபவித்துக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X