Home
News

மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி கொடுத்து அதிரடி காட்டிய BSNL.!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை விட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல்.ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் 4ஜி சேவை இல்லாதது மிகப் பெரிய குறை. மற்ற தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவை வழங்கி வருகிறது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது மலிவு விலையில் அதிக வேலிடிட்டி தரும் திட்டத்தை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த பிஎஸ்எனஎல் நிறுவனத்தின் திட்டம் மற்றும் அவற்றின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் தான் அதிக நன்மைகளை வழங்குகிறது.

மலிவு விலை  திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி கொடுத்த BSNL.!

பிஎஸ்என்எல் பயனர்கள் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 35 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். மேலும் இந்த திட்டம் இது 200 லோக்கல் மற்றும் நேஷனல் வாய்ஸ் கால் நிமிடங்களை வழங்கும். அதாவது இலவசமாகக் கிடைக்கும் வாய்ஸ் கால் நிமிடங்களுக்குப் பின்னர் ஒவ்வொரு நிமிடத்திற்கும் (Per Minute) கட்டணம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதுதவிர இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களை (BSNL Tunes) வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் என்டர்டெயின்மென்ட்சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

மலிவு விலை  திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி கொடுத்த BSNL.!

பிஎஸ்என்எல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்குத் தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் BSNL ட்யூன்ஸ், EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.

மலிவு விலை  திட்டத்தில் 35 நாட்கள் வேலிடிட்டி கொடுத்த BSNL.!

ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் கீழ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்
மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற பல சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டம் 600ஜிபி மொத்த டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு (அதாவது 600ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு) இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Prepaid Plan with 35 Days Validity at Low Price: Full Details! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X