Home
News

ஒரே பிஎஸ்என்எல் ரீசார்ஜ்.. 180 நாட்களுக்கு கவலை இருக்காது.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?

தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். அதேபோல் இந்த 2025-ம் ஆண்டு இறுதிக்குள் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன தனியார் டெலிகாம் நிறுவனங்கள். ஆனால் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களை உயர்த்தவில்லை.

அதாவது இப்போதும் கூட மலிவு விலையில் அதிக சலுகைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். எனவே தான் பலர் பிஎஸ்என்எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக சலுகைகளை வழங்குகிறது. இங்கே இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஒரே பிஎஸ்என்எல் ரீசார்ஜ்.. 180 நாட்களுக்கு கவலை இருக்காது..

பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 897 Prepaid Plan) ஆனது 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 90ஜிபி டேட்டா மட்டுமே வழங்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 6 மாதங்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை எதிர்பார்க்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது. ஒருவேளை அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 160 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். அதேபோல் இந்த பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் தற்போது 4ஜி சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் 1 லட்சம் 4ஜி தளங்களை இணைக்கும் இலக்கை அடைய மிக அருகில் உள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான தகவலின்படி, 83,629 4ஜி டவர்களை பிஎஸ்என்எல் நிறுவியுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் மாதத்திற்கு முன் 1 லட்சம் டவர்கள் அமைக்கும் இலக்கு முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இந்நிறுவனம் 1 லட்சம் 4G தளங்களை நிறுவிய பிறகு, 5G ஐ அறிமுகப்படுத்தவும் உள்ளது. 5ஜி சேவையை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே டெல்லியில் 5ஜி எஸ்ஏ-வை சோதிக்கத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், டிசிஎஸ் உதவியுடன் தற்போதுள்ள 4ஜி தளங்களை 5ஜி-க்கு மேம்படுத்தும் பணிகளைச் செய்யவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள 4ஜி சைட்களை ஒரு எளிய மென்பொருள் உந்துதலுடன் 5ஜி என்எஸ்ஏ-க்கு மேம்படுத்த முடியும் என்பதை டாடா குழுமம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL prepaid plan under Rs 900 with 180 days validity: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X