அள்ளிக் கொடுக்கும் BSNL.. தினமும் 3GB டேட்டா.. 84 நாள் வேலிடிட்டி.. மாதம் ரூ.199 போதும்.. எந்த திட்டம்?
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், இப்போது அதன் பயனர்களுக்கு ஒரு வியக்க வைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா, வாய்ஸ் கால், SMS நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
BSNL: பிஎன்என்எல் (BSNL) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான நன்மைகளை வழங்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அதன் பெஸ்ட் திட்டங்களில் சில பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. விரைவில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி (4G) சேவையை அறிமுகம் செய்யும் என்று அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் (BSNL): இதனால், அதன் பழைய திட்டங்களில் BSNL இப்போது மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மாற்றத்தினால் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அல்டிமேட் நன்மைகள் மிகவும் மலிவான விலையில் கிடைத்துள்ளது. சரி, இப்போது நேரடியாக பிஎஸ்என்எல் (BSNL) திட்டம் பற்றிய விபரங்களை பார்க்கலாம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டம் பிஎஸ்என்எல் இன் ரூ. 599 திட்டம் தான்.
பிஎஸ்என்எல் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid Plan):
இந்த பிஎஸ்என்எல் ரூ. 599 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள் வரை செல்லுபடியாகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த நாட்களுக்கு மொத்தமாக 252ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
தினசரி 3ஜிபி டேட்டா: இந்த தினசரி டேட்டா 3ஜிபி நிறைவடைந்த பிறகு, ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) கீழ் 40 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த திட்டத்தில் டேட்டாவை பற்றிய கவலையே கஸ்டமர்களுக்கு வேண்டியது கிடையாது. இந்த திட்டத்துடன் கூடுதல் இலவச நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது.

ஃப்ரீ நன்மைகள்: இலவச நன்மைகளை பற்றி பேசுகையில், இது ஜிங்க் (Zing) ஆப் சந்தா கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், பிஆர்பிடி (PRBT), அஸ்ட்ரோசெல் (Astrocell) மற்றும் கேம்ஆன் சர்வீஸ் (GameOn Services) போன்ற நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த விலை ரூ. 599 என்றாலும், இதன் மாதாந்திர கட்டணமாக நாம் வெறும் ரூ.199 மட்டுமே செலுத்துகிறோம் என்பது கவனிக்கத்தக்கது.
மாதம் ரூ.199 போதுமா? வெறும் ரூ. 199 என்ற மாத கட்டணத்துடன் உங்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. அன்லிமிடெட் ஆக லோக்கல் மற்றும் எஸ்டிடி (STD) அழைப்பு நன்மை கிடைக்கிறது. இத்துடன் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இத்துடன் கூடுதலாக இலவச நன்மையையும் வழங்குகிறது. உண்மையில் இது ஒரு பெஸ்ட் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும்.
பெஸ்ட் பிளான்: 84 நாட்களுக்கு எந்தவித கவலையும் இன்றி, டேட்டா, வாய்ஸ் கால் போன்ற நன்மைகளை தடையின்றி அனுபவிக்க இது பெஸ்ட் திட்டமாக கருதப்படுகிறது. மலிவு விலையில் நீங்களும் உங்களுக்கு ஒரு பெஸ்டான பிளானை தேர்வு செய்ய நினைக்கிறீர்கள் என்றால், இந்த திட்டத்தை தேர்வு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








