ரூ.200 போதும்.. தினமும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வசதிகள்.. அசத்தும் BSNL திட்டம்.. யாருங்க விடுவா?
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக நாடு முழுவதும் 4ஜி சிம் கார்டுகள் வழங்கும் பணிகள், 4ஜி டவர்களை அமைக்கும் பணிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் 4ஜி மென்பொருள் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைய வரும் டிசம்பர் மாதம் வரையில் அவகாசம் தேவைப்படும்.
அதன்பின்னர் 4ஜி டவர்கள் சோதனை மற்றும் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகளுக்குக் குறைந்தது 6 மாதங்கள் ஆகும். எனவே அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக பிஎஸ்என்ல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். குறிப்பாக ஜியோ நிறுவனத்தை விட குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மை தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள் இந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.200-க்கு கீழ் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்து பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த திட்டத்தை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் தான் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்.
அதேபோல் ஜியோ நிறுவனமும் ரூ.199 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. ஜியோ வழங்கும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் தான். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ்களின் அணுகல் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது ஜியோ நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்.
எனவே கம்மி விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்குவது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தான். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவை வழங்காதது மட்டும் தான் இப்போது மிகப் பெரிய குறையாக உள்ளது. மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தற்போது 5ஜி சேவை வழங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் கம்மி விலையில் வைத்துள்ள சில ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் BSNL ட்யூன்களுக்கான அணுகலை வழங்கும் இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.

பிஎஸ்எனஎல் நிறுவனத்தின் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்எனஎல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








