புது SIM-க்கு கும்பிடு.. வெறும் ரூ.1-க்கு ரீசார்ஜ்.. 30 நாட்கள் வேலிடிட்டி.. ரூ.100 போதும்.. வாய்ஸ் கால்கள்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் புது சிம் கார்டுக்கு கும்பிடு போடும்படி ரூ.1 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. உங்களிடம் ரூ.100 இருந்தால் போதும், வாய்ஸ் கால்களுடன் பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்கள் கொடுக்கப்படுகிறது. இந்த விலைக்கு ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) நிறுவனங்களில் திட்டங்கள் கிடையாது. இதுகுறித்த விவரம் இதோ.
பிஎஸ்என்எல் ரூ 1 திட்டம் விவரங்கள் (BSNL Rs 1 Plan Details): இந்த திட்டம் புது கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதாவது, புதிய பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கிய கஸ்டமர்களுக்கு மட்டும் முதலாவதாக ரூ.1 விலைக்கு ரீசார்ஜ் திட்டம் கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

இந்த 30 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவையும் அதற்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் (Post Data) பயன்படுத்தி கொள்ளலாம். அதே நேரத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்களும் (National Roaming Voice Calls) பயன்படுத்த கிடைக்கிறது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ள முடிகிறது. இந்த சலுகைகளை மட்டுமே கிடைக்கும். ரூ.1 விலைக்கு இதுபோன்ற திட்டம் கிடைப்பதால், புதிய சிம் கார்டுகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதுபோக ஏற்கனவே இருக்கும் கஸ்டமர்களுக்கும் மலிவு விலையில் திட்டங்கள் கிடைக்கின்றன.
பிஎஸ்என்எல் ரூ 99 திட்டம் விவரங்கள் (BSNL Rs 99 Plan Details): இந்த திட்டம் புதிய கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இதில் 15 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த 15 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது.
அதேபோல 50 எம்பி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த 50 எம்பிக்கு பிறகு 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இப்போதைக்கு ரூ.100 விலைக்குள் இந்த திட்டங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதற்கு அடுத்து ரூ 107 விலைக்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ 107 திட்டம் விவரங்கள் (BSNL Rs 107 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தையும் கிட்டத்தட்ட ரூ 100 கணக்கில் எடுத்து கொள்ளலாம். ரூ.7 மட்டுமே விலை அதிகமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் மாதாந்திர வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, பிஎஸ்என்எல்லில் மலிவு விலைக்கு மாதாந்திர திட்டம் வேண்டுமானால், இது கிடைக்கிறது.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும். ஆனால், டேட்டா சலுகை தினசரிக்கு கொடுக்கப்படாது. மொத்தமாக 3 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இது 28 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக கிடைக்கும் டேட்டாவாகும். ஆகவே, வேலிடிட்டிக்கு முன்பே பயன்படுத்திவிட்டால், வேகம் குறைக்கப்படும்.
ஆகவே, 3 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படும். இதுபோக வாய்ஸ் கால்களும் அன்லிமிடெட் சலுகையில் கொடுக்கப்படாது. 200 நிமிடங்களுக்கு மட்டுமே வாய்ஸ் கால்கள் கிடைக்கும். இதை அனைத்து நெட்வொர்க்கிலும் செய்து கொள்ளலாம். மேலும், எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்காது.


Click it and Unblock the Notifications








