Home
News

48 மணி நேர BSNL ஆஃபர்.. உடனே ரீசார்ஜ் செய்தால் 600GB டேட்டா.. 365 நாள் அன்லிமிடெட் வாய்ஸ், SMS.. எந்த திட்டம்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் பல தீபாவளி சிறப்பு சலுகைகள் மற்றும் ஆஃபர்களை அறிவித்தன. இதில் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமும் அதன் வாடிக்கையாளர்களை இரட்டிப்பு சந்தோஷத்தை வழங்கும்படியான தீபாவளி சிறப்பு சலுகைகளை அறிவித்தன. தனியார் நிறுவனங்கள் வழங்கிய சில சிறப்பு சலுகைகள் தீபாவளி வரை மட்டுமே கிடைத்த நிலையில், பிஎஸ்என்எல்-ன் சலுகை இன்னும் 48 மணி நேரத்திற்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

தற்போது கிடைக்கும் இந்த தீபாவளி சலுகையை பிஎஸ்என்எல் சிம் கார்டு (BSNL SIM card) வைத்துள்ள எல்லா வாடிக்கையாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும், இத்தகைய சிறப்பு சலுகை கிடைக்கிறதென்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகவுள்ளது. இந்த சலுகையின் மூலம் 600GB டேட்டா, 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை ஆகியவற்றை நீங்கள் பெற முடியும்.

48 மணி நேர BSNL ஆஃபர்.. உடனே ரீசார்ஜ் செய்தால் 600GB டேட்டா..

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த தீபாவளி சிறப்பு திட்டம், உங்களுக்கு ரூ. 100 நேரடி விலை தள்ளுபடியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு சலுகை, பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்டத்துடன் (BSNL Rs 1999 Plan) கிடைக்கிறது. இந்த திட்டத்தின் விலை அடுத்த 48 மணி நேரத்திற்கு வெறும் ரூ. 1899 என்ற குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்குமென்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் வழக்கமான ஒரு பிஎஸ்என்எல் திட்டம் தான் என்றாலும், இது தற்போது தள்ளுபடி விலையுடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. அதாவது ஒரு முழு வருடத்திற்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 600GB டேட்டா (Data benefit) நன்மையை வழங்குகிறது. இத்துடன் அணைத்து நெட்வொர்க்குகளுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) நன்மையையும் வழங்குகிறது.

இந்த பிஎஸ்என்எல் ரூ. 1999 திட்டம் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் கூடுதல் இலவச நன்மைகளாக சில சிறப்பு சேவைக்கான அணுகளையும் இந்த திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் நவம்பர் 7, 2024 ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்குமென்பதனால், முந்திக்கொள்ளுங்கள். 1 வருடத்திற்கு 1 முறை மட்டும் ரீசார்ஜ் செய்து, அடுத்த தீபாவளி வரை நன்மைகளை அனுபவிக்க இதுவொரு சிறந்த திட்டமாகும்.

Best Mobiles in India

English summary
BSNL Post Diwali Special Offer Rs 100 OFF On BSNL Rs 1999 Plan Get 600GB Data 365 Days Unlimited Calling
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X