Home
News

BSNL SIM-க்கு பெரிய கும்பிடு.. 150 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?

தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம். அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது கூடுதல் சலுகைகளும் அறிவித்து வருகிறது. எனவே தான் பிஎஸ்என்எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் 150 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

BSNL SIM-க்கு பெரிய கும்பிடு.. 150 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 897 Prepaid Plan) ஆனது 165 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. அதாவது இந்த திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டாவானது வேலிடிட்டி முடிவதுக்கும் பொருந்தும். ஆகவே இந்த டேட்டா முன்கூட்டியே பயன்படுத்தி முடித்தால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். ஒருவேளை கூடுதல் டேட்டா தேவைப்பட்டால் டேட்டா வவுச்சர்களை பிஎஸ்என்எல் பயனர்கள் தேர்வு செய்யலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 997 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். எனவே இந்த பிஎஸ்என்எல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 300ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். தினசரி 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது.

குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களுக்கு 150 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒரு வேளை கம்மி பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. இப்போது அந்த திட்டத்தின் நன்மைகளையும் பார்க்கலாம்.

BSNL SIM-க்கு பெரிய கும்பிடு.. 150 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி..

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Plans With 150 Days or More Validity: Price, Data and Calling Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X