Home
News

பிஎஸ்என்எல் ரூ.99/-, 149/- மற்றும் ரூ.339/- பேக் : ஏர்டெல், ஜியோவிற்கு சரியான போட்டி.!

இந்த புதிய பிஎஸ்என்எல் பேக் ரூ.149 அல்லது அதைவிட குறைவான ஒரு விலையில் தொடங்கப்படலாம்.

By Muthuraj

நாட்டில், ரிலையன்ஸ் ஜியோவுடன் நடக்கும் கட்டண யுத்தத்தின் ஒரு பகுதி தான் இது. வழக்கமாக ஏர்டெல் நிறுவனம் தான் ஜியோவிற்கு எதிரான மற்றும் கிட்டத்தட்ட சமமான சலுகைகளை வழங்கி அதிரடி காட்டும். இப்போது அதே பாணியை அரசு நடத்தும் தொலைத்தொடர்பான பிஎஸ்என்எல் நிறுவனமும் ஜியோவிற்கு சமமான சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளது

சமீப காலமாக இந்தியாவின் எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின், எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக மூலகாரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிற்கிறது. புதிய திட்டமாக இருப்பினும் சரி, புதிய சலுகையாக இருப்பினும் சரி அனைத்துமே ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டி போடும் முனைப்பில் தான் வெளியாகின்றன, உடன் தங்களிடம் ஏற்கனவே இருக்கும் வடிக்கையாளர்களை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியாகவும் இப்புதிய சலுகைகள் பார்க்கப்படுகின்றன. அப்படியாக பிஎஸ்என்எல் அதன் புதிய ரூ.149/- பேக் தனை அறிமுகம் செய்துள்ளது.!

நன்மை

நன்மை

இந்த புதிய ரூ.149/- திட்டம் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க் உடனாகவும் ஒரு மாத காலம் வரம்பற்ற குரல் அழைப்புகளை நிகழ்த்திக் கொள்ளலாம்.

குறைவான ஒரு விலையில்

குறைவான ஒரு விலையில்

"அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் இந்த ரூ.149 அல்லது அதைவிட குறைவான ஒரு விலையில், ஒரு சிறிய அளவிலான இலவச தரவு உடன் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய குரல் அழைப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளோம்" என்று பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா அறிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.99/-

ரூ.99/-

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 300எம்பி தரவு உட்பட பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல்-களுக்கான வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு திட்டமான ரூ.99/- பேக்கை அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

விலை வேறுபாடு

விலை வேறுபாடு

28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த ரூ.99/-க்கு கொல்கத்தா வட்டம் , மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், அசாம், குஜ்ராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களிலும் பிற இடங்களில் ரூ. 119/-ல் இருந்து ரூ.149/- வரை என்று வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.339/-

ரூ.339/-

பிஎஸ்என்எல் பான்-இந்தியா அடிப்படையில் 28 நாட்கள் செல்லுபடியாகும் மேலும் ஒரு திட்டமான ரூ.339/- பேக்கையும் அறிமுகம் செய்துள்ளது. எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு மற்றும் 1ஜிபி டேட்டாவை இந்த பிஎஸ்என்எல் புதிய எஸ்டிவி வழங்குகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.1099/-

ரூ.1099/-

பிஎஸ்என்எல் ஏற்கனவே ரூ.1099/-க்கு 30 நாள் செல்லுபடியாகும் அதன் வரம்பற்ற 3ஜி சேவையை வழங்கி வருகிறது என்பதும், பிஎஸ்என்எல் நிறுவனத்தால் வழங்கப்படும் கட்டண சலுகைகள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு மலிவான மற்றும் சிறந்த சேவைகளை வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும் டாப் 10 ஆப்ஸ் (ஆண்ட்ராய்டு).!

Best Mobiles in India

English summary
BSNL plans unlimited voice plan for Rs. 149. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X