எப்போது அறிமுகம் செய்யப்படும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை? ஆன்லைனில் கசிந்த தகவல்
பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் பல அருமையான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மேலும் சமீபத்தில் 91mobiles வெளியிட்ட தகசவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று 4ஜி சேவை
அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிறுவனம் சரியான 4ஜி வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) உடன் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4ஜி சேவைகளுக்கு இந்திய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியா முழுவதும் 1 லட்சம் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவவுள்ளது. இதில் பீகாரில் மட்டும் 40,000 டெலிகாம் டவர்களையும் நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்த சில ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 110 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் ஈரோஸ் நவ் இலவச ஜிங் மியூசிக், ஹார்டி கேம் சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறதுஇந்த அசத்தலான ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். themobileindian தகவலின்படி, இந்த புதிய திட்டம் அனைத்து இடங்களிலும்கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 18 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி வேலிடிட்டி 150 ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு நீங்கள் அழைப்புகளைச் செய்ய விரும்பினால், வேறு ஒரு திட்டத்தில் டாப்-அப் செய்ய வேண்டும்.
சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 197 ப்ரீபெய்ட் திட்டத்தில் 18 நாட்களுக்கு மட்டுமே டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு 150 நாட்களுக்கு வேலிடிட்டி உள்ளது. எனவே இதன் மூலம் உள்வரும் அழைப்புகள் (incoming calls) 150 நாட்களுக்கு கிடைக்கும். கம்மி விலையில் அதிக நாட்கள் வேலிடிட்டி மட்டும் தேடும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.118 மற்றும் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டங்கள்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-118 என்று கூறப்படும் ரூ.118 திட்டம் ஆனது 0.5 டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த ரூ.118 திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.
பிஎஸ்என்எல் STV_147 என்று கூறப்படும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 10ஜிபி டேட்டா, BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளிட்ட சில நன்மைகளை மட்டுமே வழங்குகிறது. இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.185 திட்டம்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-185 என்று கூறப்படும் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகல் உள்ளட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்எனஎல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்கு தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம்80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் BSNL ட்யூன்ஸ் மற்றும்EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications