Home
News

நச்சுனு 4 திட்டங்களில் சலுகைகளை அள்ளி வீசிய BSNL.. தினமும் 2GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களும் பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் உள்ளது. எனவே தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

நச்சுனு 4 திட்டங்களில் சலுகைகளை அள்ளி வீசிய BSNL.. தினமும் 2GB டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ. 199 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 199 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data benefit) வழங்குகிறது. மேலும் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL prepaid plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையைப் பெறுகிறது. இத்துடன் உங்களுக்குத் தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி (செல்லுபடியாகும் காலம்) 30 நாட்கள் ஆகும்.

ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music), மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்.

நச்சுனு 4 திட்டங்களில் சலுகைகளை அள்ளி வீசிய BSNL.. தினமும் 2GB டேட்டா!

பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 229 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை (2GB data benefit) வழங்குகிறது. மேலும் இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் (BSNL prepaid plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினமும் இலவசமாக 100 தினசரி எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் அரினா கேம்ஸ் (Arena Games) சேவையை வழங்குகிறது இந்த அசத்தலான எஸ்என்எல் ரூ.229 ப்ரீபெய்ட் திட்டம் . குறிப்பாக இந்த திட்டம் அனைத்து நன்மைகளையும் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்(BSNL Rs 249 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதாவது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

நச்சுனு 4 திட்டங்களில் சலுகைகளை அள்ளி வீசிய BSNL.. தினமும் 2GB டேட்டா!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 666 Prepaid Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதன்படி பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் அதிக நாள் வேலிடிட்டி வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Plans that offer 2GB Data, SMS, Unlimited Calling per day at low cost: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X