Home
News

பிஎஸ்என்எல் : 2 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் சேட்டிலைட் போன் திட்டம்.!

பி.எஸ்.என்.எல் நிறுவனம், ஐ.எம்.எம்.ஆர்.ஏ.எஸ்.ஏ. சேவையை பயன்படுத்தி செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை ஆரம்பித்துள்ளது. இது ஆரம்பத்தில் அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.!

By Prakash

புதுடில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குடிமக்களுக்கு செயற்கைக்கோள் சேவையை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் எந்த மூலையிலும் வேலை செய்ய இயலும். மேலும் இவை பல்வேறு தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

சர்வதேச கடல்சார் அமைப்புக்கு தற்போது பயன்படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இது 18 முதல் 24 மாதங்களில், மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் " என பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப்பாம் ஸ்ரீவாஸ்தவா பி.டி.ஐ. தெரிவித்தார்.

செயற்கைக்கோள் :

செயற்கைக்கோள் :

"இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது, ஆனால் ஒருமுறை குடிமக்களுக்காக பயன்படும் வகையில் இந்த செயற்கைக்கோள் உள்ளது. இந்த வால்யூம் சேவை பொருத்தமாட்டில் பல்வேறு செலவைக் குறைக்கும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விமானங்கள்:

விமானங்கள்:

பூமியின் மேலே 35,700 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள செயற்கைக்கோள்களில் இருந்து நேரடியாக சிக்னலை சார்ந்து இருக்கும்போது, செயற்கைக்கோள், எந்தவொரு நாட்டிலும் இயங்கும் விமானங்கள் மற்றும் கப்பல்களுக்குள் இவை பயன்படும் வகையில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மொபைல் நெட்வொர்க்குகள்:

மொபைல் நெட்வொர்க்குகள்:

பாரம்பரிய மொபைல் நெட்வொர்க்குகள் சுமார் 25-30 கி.மீ. சுற்றி கோபுரங்களை சுற்றி அமைந்திருக்கும் மற்றும் கோபுரங்களின் உயரத்திற்கு சமமான அல்லது கீழே இருக்கும் தொலைபேசிக்கு சிக்னல்களை அனுப்ப முடியும்.

பி.எஸ்.என்.எல் :

பி.எஸ்.என்.எல் :

பி.எஸ்.என்.எல் நிறுவனம், ஐ.எம்.எம்.ஆர்.ஏ.எஸ்.ஏ. சேவையை பயன்படுத்தி செயற்கைக்கோள் தொலைபேசி சேவையை ஆரம்பித்துள்ளது. இது ஆரம்பத்தில் அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புத் துறை:

தொலைத் தொடர்புத் துறை:

இந்த நெட்வொர்க் அனைத்து இடங்களிலும் பயன்படும்வகையில் அமைக்கப்பட்டுள்ளது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்கா கூறுகையில், மாநில போலீஸ், ரயில்வே, பார்டர் செக்யூரிட்டி படை மற்றும் பிற அரசு ஏஜென்சிகள் கையாளப்படும் நிறுவனங்களுக்கு இந்த சேவை முதலில் வழங்கப்படும் என அறிவித்தார். விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் பயணிக்கும் மக்கள் தொழைப்பேசி சேவை பயன்படுத்த முடியும். என மனோஜ் சின்கா தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு:

வேலைவாய்ப்பு:

நாட்டில் செயற்கைக்கோள் சேவைகளின் புதிய சுற்றுச்சூழல் ஒன்றை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம், "என ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார். மேலும் இதன் மூலம் பல வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

 டாடா கம்யூனிகேஷன்ஸ்:

டாடா கம்யூனிகேஷன்ஸ்:

இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் தற்போது டாடா கம்யூனிகேஷன்ஸ் மூலம் வழங்கப்படுகிறது, தற்போது வித்ஷ்சஞ்சார் நிகாம் (இப்போது டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) என்ற பெயரில் உரிமம் பெற்றுள்ளது.

டி.சி.எல்:

டி.சி.எல்:

டி.சி.எல். சேவை 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் நிறுத்தப்படும். அதற்க்குப்பின் பிஎஸ்என்எல் தனது செயற்கைக்கோள் மொபைல் குரல் அழைப்பு சேவைகள் மற்றும் எஸ்எம்எஸ் வசதியுடன் தொடங்கும். என "பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப் ஸ்ரீவஸ்தவா கூறினார்.

பாதுகாப்புப் படை:

பாதுகாப்புப் படை:

நாட்டில் செயல்படக்கூடிய 1,532 அங்கீகரிக்கப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி இணைப்புக்கள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை பாதுகாப்புப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன. கப்பல்களில் இத்தகைய தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு கடல்வழி சமூகத்திற்கு 4,143 அனுமதிப்பத்திரங்களையும் டி.சி.எல்.வழங்கியுள்ளது.

எல்ஐஎம்எஸ்:

எல்ஐஎம்எஸ்:

இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசிகள் பயன்படுத்த பாதுகாப்பு விஷயங்கள் உள்ளன. இந்தியாவில் சட்டப்பூர்வ இடைமறிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (எல்ஐஎம்எஸ்) மூலம் இப்போது செயற்கைக்கோள் தொலைபேசி நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீவாஸ்தவா கூறினார்.

Best Mobiles in India

English summary
BSNL plans satellite phone service for all in 2 years : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X