Home
News

30, 60, 90, 365 நாட்கள் வேலிடிட்டி., வரம்பற்ற இலவச டேட்டா- பிஎஸ்என்எல் சிறந்த ரீசார்ஜ் திட்டம்!

பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு பல்வேறு விலைப்பிரிவில் திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. டெலிகாம் நிறுவனம் பல்வேறு விலைப் பிரிவில் திட்டங்களை வழங்கி வருகிறது. 30 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள் மற்றும் 365 நாட்கள் என பல்வேறு பிரிவில் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்களில் குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா என பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் சந்தாதாரர்களுக்கு ப்ல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியாகும் தன்மை, டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் குரல் அழைப்பு பலன்களை விரிவாக பார்க்கலாம். பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களில் குரல் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் பலன்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 திட்டம் சிறந்த தேர்வாகும். இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், 50 ஜிபி அதிவேக டேட்டா, 100 எஸ்எம்எஸ் தினசரி, பிஎஸ்என்எல் டியூன்கள் மற்றும் ஈராஸ் நவ் உள்ளிட்ட அணுகலை வழங்குகிறது. இந்த திட்டமானது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கான திட்டம்

அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கான திட்டம்

அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கு பிஎஸ்என்எல்-ன் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் சிறந்த தேர்வாகும். இந்த திட்டம் 60 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் தினசரி நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் வரம்பு டேட்டா முடிந்த உடன் இதன் வேகம் 80 கேபிபிஎM் ஆகக் குறைக்கப்படும். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் குறித்து பார்க்கையில், இது ஈராஸ் நவ் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கான அணுகலை வழங்குகிறது.

ரூ.499 திட்டமானது 90 நாட்களுக்கு செல்லுபடி

ரூ.499 திட்டமானது 90 நாட்களுக்கு செல்லுபடி

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499 திட்டமானது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் குரல் அழைப்புகள், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் இதில் பிஎஸ்என்எல் டியூன் மற்றும் ஜிங்க் ஸ்ட்ரீமிங் பயன்பாடு ஆகிய நன்மைகளும் இதில் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் திட்டங்களில் வருடாந்திர திட்டத்தை தேடுபவர்களுக்கு ரூ.1500-க்குக் கீழ் சிறந்த ப்ரீபெய்ட் வருடாந்திர திட்டம் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.1498 ஆகும், இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

தினசரி 5ஜிபி டேட்டா

தினசரி 5ஜிபி டேட்டா

வீட்டில் இருந்தே வேலை செய்பவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு பிஎஸ்என்எல் பிரத்யேக ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதன் விலை ரூ.599 ஆகும். இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. சந்தாதாரர்களுக்கு பிஎஸ்என்எல் தினசரி 5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா வரம்பு முடிந்த உடன் 80 கேபிபிஎஸ் ஆக குறையும், இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல்-ன் ஜிங் ஆப் சந்தா அணுகல் கிடைக்கிறது. வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டமாக எஃப்யூபி டேட்டாவை தவிர்த்து 12 முதல் 5 மணிவரை வரம்பற்ற இலவச அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்ததிட்டத்தின் வேலிடிட்டி 110 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் ஈரோஸ் நவ் இலவச ஜிங் மியூசிக், ஹார்டி கேம் சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறதுஇந்த அசத்தலான ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். themobileindian தகவலின்படி, இந்த புதிய திட்டம் அனைத்து இடங்களிலும்கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களைசற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் 18 நாட்களுக்கு கிடைக்கும். ஆனால் இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி வேலிடிட்டி 150 ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு நீங்கள் அழைப்புகளைச் செய்ய விரும்பினால், வேறு ஒரு திட்டத்தில் டாப்-அப் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
BSNL Plans Provide With 30, 60, 90, 365 Days Validity: Unlimited Voice Calling, Data, Voice
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X