BSNL-பதுங்கிய புலி பாய்ந்தது: ஜியோவை விட இரு மடங்கு நன்மை- குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா!

|

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அரசு ஒதுக்கும் நிதியில் பெரும்பாலானவை பிஎஸ்என்எல் தர நிலை ஊழியர்களுக்கு சென்றுவிடுவதால் பெரிதளவு திட்டத்திற்கு பணம் ஒதுக்கமுடியாமல் சிரமப்பட்டு வந்தது. அதேபோல் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

விருப்ப ஓய்வு திட்டம்

விருப்ப ஓய்வு திட்டம்

இதையடுத்து தனது ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்கவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டு, புதிய விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி சுமார் 1 லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்றும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கணிப்புப்படி சுமார் 75,000 ஊழியர்கள் இத்திட்டத்தில் விருப்ப ஓய்வு பெறுவார்கள் என்று கணித்துள்ளது.

 7,000 கோடி ரூபாய் சம்பளச் செலவுகள் மிச்சம்

7,000 கோடி ரூபாய் சம்பளச் செலவுகள் மிச்சம்

இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 786 பேர் பணியாற்றிய நிலையில் 78 ஆயிரத்து 569 பேர் விருப்ப ஓய்வு பெறுகின்றனர். இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் சம்பளச் செலவுகள் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Airtel: இனிமேல் இந்த Airtel: இனிமேல் இந்த "சேவை" யாருக்கும் கிடையாது! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

நவீனமயமாகும் பிஎஸ்என்எல்

நவீனமயமாகும் பிஎஸ்என்எல்

அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்தில் சுமார் 74,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. ஆகையால் இதை விற்பதற்கோ அல்லது மூடப்படுவதற்கோ வாய்ப்பே இல்லை என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக பிஎஸ்என்எல் நிறுவனத்தை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மருதம் திட்டம்

மருதம் திட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு அறிமுகம் செய்த இந்த திட்டம், ஜனவரி 21ம் தேதி 2020 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்யக் தமிழகத்தில் கிடைக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் தற்போது இதன் கிடைக்கும் காலத்தை 90 நாட்கள் நீடித்துள்ளது. புதிய பி.எஸ்.என்.எல் அறிவிப்புப்படி இந்த மருதம் திட்டமானது மார்ச் 31ம் தேதி 2020 வரை ரீசார்ஜ் செய்யக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பு வழங்கப்பட்டு வந்த 345 நாள் வேலிடிட்டி காலத்திலிருந்து 45 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது

ரூ.1,999-ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.1,999-ப்ரீபெய்ட் திட்டம்

ஜனவரி 26, 2020 மற்றும் பிப்ரவரி 15,2020-க்கு இடையில் இந்த ரூ.1,999-ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 436 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும் என பிஸ்என்எல் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,999-திட்டத்தின நன்மைகள் ஆனது, தினசரி 3ஜிபி அளவிலான டேட்டா, ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என்கிற வரம்பு, தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் ரூ.2,020 மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,999-திட்டத்தை ஒப்பிடும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் தான் இரண்டு மடங்கு டேட்டா நன்மைகளை வழங்குகிறது, மேலும் கூடுதலாக 71நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது.

Jio அதிரடி ஒவ்வொரு ரீசார்ஜ் உடன் ரூ.300 வரை கேஷ்பேக்! அம்பானியின் ராஜ தந்திரம்!Jio அதிரடி ஒவ்வொரு ரீசார்ஜ் உடன் ரூ.300 வரை கேஷ்பேக்! அம்பானியின் ராஜ தந்திரம்!

1,699 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால்...

1,699 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால்...

அதேபோல் பிஎஸ்என்எல் 1,699 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 2GB டேட்டா வழங்குவதோடு, 250 நிமிட தினசரி வாய்ஸ் காலிங் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வீதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பிஎஸ்என்எல் டியூன் சப்ஸ்கிரைப் வரம்பற்ற பாடல்கள் ஒருவருடத்திற்கு வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டமும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் 436 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL plans offering up to 3 GB daily data and more

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X