மோடி ஸ்பெஷல்.. குஜராத்தில் BSNL செய்யும் அடேங்கப்பா வேலை.. 4G-க்காக 2910 டவர்களில் கை வைக்கிறது!
இதென்ன குஜராத் ஸ்பெஷல்-ஆ என்று கேட்கத்தோன்றும் படியான ஒரு வேலையை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் செய்ய உள்ளது. இதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள 2,910 டவர்களில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அப்படி என்ன மாற்றம் செய்யப்படவுள்ளது? பிஎஸ்என்எல் குஜராத்தில் என்ன செய்யவுள்ளது? இதோ விவரங்கள்:
மாநில தகவல் தொடர்பு அமைச்சர் (Minister of state for communications) ஆன பெம்மசானி சந்திர சேகர் (Pemmasani Chandra Sekhar), எழுத்துப்பூர்வமாக அளித்த ஒரு பதிலில், குஜராத் மாநிலத்தில் உள்ள 2,910 இடங்களில் உள்ள 2ஜி / 3ஜி டவரக்ள் ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை கொண்டு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை யால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 4ஜி செறிவூட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக (நாடு முழுவதும் உள்ள கவர் செய்யப்படாத கிராமங்களில் 4ஜி மொபைல் சேவைகளை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக) குஜராத்தின் 949 கிராமங்களுக்கு 4ஜி சேவைகளை கொண்டு செல்ல பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாகவும் பெம்மசானி சந்திர சேகர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாரத்நெட் (BhartNet) திட்டத்துடன், நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களுக்கு, பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்கிறது என்பதையும் பெம்மசானி சந்திர சேகர் உறுதிப்படுத்தி உள்ளார். குறிப்பாக குஜராத்தின் கிராமப்புறங்களில் பாரத்நெட் கனெக்ஷன் ஆனது 14,316 கிராம் பஞ்சாயத்துகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் செலவானது, FY24 இல் ஈட்டிய மொத்த வருவாயில் 39% மட்டுமே உள்ளது என்பதையும் இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மறுமலர்ச்சி தொகுப்புகளின் காரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனமானது நல்ல லாபத்தை காட்ட தொடங்கியுள்ளதாகவும் பெம்மசானி சந்திர சேகர் கூறியுள்ளார்.
FY27 நிதியாண்டுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதே அரசின் குறிக்கோள் ஆகும். இதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி கனெக்டிவிட்டிக்கான தொழில்நுட்பத்தை நிறுவி / கட்டமைப்புகளை செய்து வருகிறது. எல்லாவற்றை விடவும் வரும் 2025 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் 5ஜி சேவையும் அறிமுகம் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜிக்கு பயன்படுத்தும் கோர்-ஐ வைத்தே 5ஜி-க்கு அப்கிரேட் ஆகிவிடலாம். அதாவது பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்தை வைத்து மிகவும் எளிதாக பிஎஸ்என்எல் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாற முடியும். ஆகையால் பிஎஸ்என்எல் 4ஜி எவ்வளவு எவ்வளவு தாமதாக அறிமுகமானாலும் அது உடனே 5ஜி-க்கு அப்கிரேட் ஆகும் என்பதால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இன்னும் சிறிது காலம் பொறுப்பது நல்லது!
சில தினங்களுக்கு முன்னர், பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் உள்நாட்டு 4ஜி கோர் (Indigenous 4G core) நெட்வொர்க்கை தெலுங்கானாவில் அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களால் வேகமான இண்டர்நெட் ஸ்பீடை அனுபவிக்க முடியும்.
இது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services) தலைமையிலான கூட்டமைப்பின் கீழ் சாத்தியமாகி உள்ளது. இந்த கூட்டமைப்பில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் சி-டாட் (C-DoT) என்று அறியப்படும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையமும் உள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான கோர், சி-டாட் மூலம் வழங்கப்படுகிறது, ரான் (ரேடியோ அக்சஸ் நெட்வொர்க்) டூல்கள் தேஜாஸ் நெட்வொர்க் மூலம் வழங்கப்படுகின்றன.
மேலும் டிசிஎஸ் நிறுவனமானது சிஸ்டம்ஸ் இன்டக்ரேட்டர் (Systems integrator) ஆகவு செயல்பட்டு, பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்குகளை பராமரிப்பதற்குமான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளும். பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 41,000 க்கும் மேற்பட்ட 4ஜி தளங்களை இன்ஸ்டால் செய்து, இயக்கியுள்ளதும்.. 50,000-க்கும் மேற்பட்ட தளங்களின் இன்ஸ்டாலேஷன் முடிந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் 2025 நடுப்பகுதியில் உள்நாட்டு 4ஜி தொழில்நுட்பத்துடன் 1 லட்சம் 4ஜி தளங்களை நிறுவ வேண்டும் என்கிற குறிக்கோளுடன் பணியாற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications








