Home
News

அட்ராசக்க.. தமிழகத்துக்கு வருகிறது BSNL 4ஜி சேவை.. 5ஜி சேவை எப்போது அறிமுகம் தெரியுமா?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அதிக நன்மைகளை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை நாடு முழுவதும் வழங்கிவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்னும் 4ஜி சேவையை கூட நாடு முழுவதும் வழங்கவில்லை. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி மற்றும் 4ஜி சேவை குறித்து முக்கியத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து சற்று விரிவான தகவல்களைப் பார்ப்போம்.

அட்ராசக்க.. தமிழகத்துக்கு வருகிறது BSNL 4ஜி சேவை..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) ஆனது கடந்த 2023 ஆண்டு அக்டோபர் மாதம் 636,830 சந்தாதாரர்களை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குப் பின்னடைவு இருந்தபோதிலும் வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது.

சமீபத்தில் பிஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரவின் குமார் பூர்வர் தெரிவித்தது என்னவென்றால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 5ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என்று கூறினார். அதேபோல் தகவல் தொலைத்தொடர்பு வெறும் வசதி மட்டும் அல்ல நாட்டின் குடிமக்களுக்குத் தகவல், கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானதாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தற்போது நாடு முழுவதும் ஆறு லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபபர் கொண்டு செல்லும் ஒரு லட்சியத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. பின்பு பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தற்போது 4ஜி தொழில்நுட்ப வசதி அளிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வரும் மார்ச் மாதத்திற்குள் தடையின்றி 4ஜி தொழில்நுட்ப வசதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று பிரவின் குமார் பூர்வர் கூறியுள்ளார்.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகள் நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2339 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டம் 395 நாட்கள் வேலிடிட்டி வழங்கும்.

அதேபோல் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட்((Eros Entertainment) மற்றும் லோக்தூன் (Lokdhun) சப்ஸ்கிரிப்ஷன் வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.2339 ப்ரீபெய்ட் திட்டம்.

அட்ராசக்க.. தமிழகத்துக்கு வருகிறது BSNL 4ஜி சேவை..

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனமும் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட்திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா மட்டும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் வழங்கும் தினசரி 3ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இந்த திட்டம் 395 நாட்கள் வேலிடிட்டி வழங்கும்.அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL planning to launch its 5G service in early 2025: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X