ரூ.200-க்கு கீழ் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி தரும் அசத்தலான BSNL திட்டம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அசத்தலான சலுகைகள் மற்றும் அருமையான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதுவும் தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல்..
ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையை அறிமுகம் செய்யவில்லை. இருந்தபோதிலும் கூடிய விரைவில் இந்நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.200-க்கு கீழ் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி தரும் ஒரு அசத்தலான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம் உள்ளது. இப்போது அந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் தான் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம். தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் இதுபோன்ற ஒரு திட்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் BSNL ட்யூன்களுக்கான அணுகலை வழங்கும் இந்த ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றே கூறலாம்.
பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்எனஎல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்எனஎல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

பிஎஸ்எனஎல் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இதிலும் தினமும் 1 ஜிபி டேட்டா நன்மை, அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை என்று அனைத்து நன்மைகளும் வழங்கப்படுகிறது. BSNL அறிமுகம் செய்துள்ள ரூ. 184 மற்றும் ரூ. 185 திட்டங்களில் கிடைக்கும் பலன்கள் இதில் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இது BSNL ட்யூன்ஸ் மற்றும் ஹார்டி கேம்களுக்கான அணுகலை மட்டும் கூடுதலாகப் பெறுகிறது. வழக்கம் போல நிறுவனம் வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 80kbps ஆக மாற்றப்படும்.
பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் பிஎஸ்எனஎல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.


Click it and Unblock the Notifications








