Home
News

Jio, Airtel-ஐ முடித்த BSNL.. 300 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. மாதாந்திரம் ரூ.150 போதும்!

பிஎஸ்என்எல் (BSNL) ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு லம்ப்-சம் டேட்டா (Lump-sum data) மற்றும் வாய்ஸ் கால்களுடன் (Voice Calls) கிடைக்கும் திட்டங்கள் மலிவான விலைக்கு வருகின்றன. இதில் 300 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமானது (300 Days Validity), கஸ்டமர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இது மலிவான விலையாகும்.

பிஎஸ்என்எல் ரூ.1499 திட்டமானது 10 மாதங்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. சொல்லப்போனால், ரூ.1,500 விலைக்குள் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களிடம் 10 மாத வேலிடிட்டி கொண்ட திட்டம் கிடையாது. ஆகவே, பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு மட்டுமே இவ்வளவு மலிவான விலைக்கு கிடைக்கிறது.

Jio, Airtel-ஐ முடித்த BSNL.. 300 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

பிஎஸ்என்எல் திட்டம் ரூ.1499 (BSNL Plan Rs 1499): வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கும். ஆனால், டேட்டா சலுகையை அதிகமாக எதிர்பார்க்க முடியாது. 300 நாட்கள் வேலிடிட்டிக்கே 32 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இது மிகவும் குறைவாக கஸ்டமர்களுக்கு தோன்றலாம். ஆனால், விலை அவ்வளவு மலிவாக இருக்கிறது.

லம்ப்-சம் டேட்டா சலுகையாக கொடுக்கப்பட்டாலும், போஸ்ட் டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. ஆகவே, 32 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி நாட்களுக்கு முன்பாகவே முடித்துவிட்டால், 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இது அன்லிமிடெட் சலுகையாக இருக்கிறது. ஆகவே, தொடர்ந்து டேட்டா கிடைக்கும்.

ஒருவேளை கஸ்டமர்களுக்கு கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பொதுவாக லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் திட்டத்தில் எஸ்எம்எஸ் சலுகைகளும் லம்ப்-சம் சலுகையாகவே கொடுக்கப்படும். ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல வாய்ஸ் கால்களும் வழக்கம்போலவே கிடைக்கிறது. 300 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தால், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls), எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள் (STD & Roaming Voice Calls) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகளை மட்டுமே பிஎஸ்என்எல் திட்டம் ரூ.1499 கொடுத்து இருக்கிறது. மாத செலவு ரூ.150 ஆக மட்டுமே உள்ளது.

இந்த திட்டத்தை பெற்ற பிறகு டேட்டா வேண்டுமானால், ரூ.16 முதல் டேட்டா திட்டங்கள் கிடைக்கின்றன. ஆகவே, ரூ.16 விலை கொண்ட டேட்டா திட்டத்தில் 2 ஜிபி மட்டுமே டேட்டா கிடைக்கும். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 24 மணி நேர வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, எந்த நேரத்தில் ரீசார்ஜ் செய்யப்படுகிறதோ அடுத்த நாள் அதே நேரம் வரையில் டேட்டா கிடைக்கும்.

கொஞ்சம் அதிக டேட்டா வேண்டுமானால், ரூ.58 விலைக்கு கிடைக்கும் திட்டத்துக்கு செல்லலாம். இதில் 8 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 7 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மாதம் முழுவதும் வேலிடிட்டி கிடைக்க ரூ.198 திட்டத்துக்கு கஸ்டமர்கள் செல்லலாம்.

இதில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் 40 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். இந்த டேட்டாவும் போதாது என்றால், ரூ.411 விலைக்கு கிடைக்கும் திட்டத்தை பெறலாம். இதில் 100 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Plan Rs 1499 With 300 Days Validity Unlimited Voice Calls 32GB Data 40Kbps Speed Post Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X