90ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்-ன் ரூ.429/- பிளான்; ஜியோ - ஏர்டெல் இரண்டுமே காலி.!

இந்த பிளானின் கீழ் வாடிக்கையாளர்கள் என்னென்ன நன்மைகளை பெறுவார்கள் என்ற விவரங்கள் இதோ.!

|

அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் புதிய குரல் மற்றும் தரவு திட்டமொன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது. ரூ.429/- என்ற விலைமதிப்பை கொண்ட புதிய திட்டமானது நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மொபைல் பயனர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

90ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்-ன் ரூ.429/- பிளான்.!

ஜியோவிற்கும் மற்றும் சமீபத்திய ஏர்டெல் அறிமுகம் செய்த புதிய திட்டங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வண்ணம் அறிமுகம் செய்யபட்டுள்ள இந்த பிளானின் கீழ் வாடிக்கையாளர்கள் என்னென்ன நன்மைகளை பெறுவார்கள் என்ற விவரங்கள் இதோ.!

நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான டேட்டா

நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான டேட்டா

ஜியோ திட்டங்களை போலவே இந்த பிஎஸ்என்எல் ரூ.429/- திட்டமானது 3 மாதங்களுக்கு, அதாவது 90 நாட்களுக்கு செலுப்படியாகும். மற்றும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கும்.

பான்-இந்தியா அடிப்படையில்

பான்-இந்தியா அடிப்படையில்

இந்த திட்டம் எந்தவொரு வலையமைப்பிற்கும் (உள்ளூர் / எல்.டி.டி) இலவச குரல் அழைப்புகளை வழங்கும் அதே நேரத்தில் 90 ஜிபி அளவிலான டேட்டாவையும் பான்-இந்தியா அடிப்படையில் (கேரளா வட்டம் தவிர) வழங்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரம்பற்ற குரல் அழைப்புகள்

வரம்பற்ற குரல் அழைப்புகள்

பிஎஸ்என்எல் குழுவின் இயக்குனர் ஆர்.கே. மிட்டல் கூறியதாவது: "குரல் மற்றும் தரவு திட்டமான 429 பிளான் ஆனது, ஒரு மாதத்திற்கு ரூ.143/- என்ற விகிதத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் / எஸ்டிடி) மற்றும் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான தரவை 90 நாட்களுக்கு வழங்குவதால், தற்போதைய சந்தை சூழ்நிலையில் இது மிகவும் போட்டி மிகுந்த திட்டமாக திகழும்."

இ-காமர்ஸ் தளம்

இ-காமர்ஸ் தளம்

கடந்த மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம், மொபிவிக் (MobiKwik) உடன் இணைந்து மொபைல் வேலட் திட்டத்தை தொடங்கியது. அந்த இ-காமர்ஸ் தளமானது நிறுவனத்தின் 100 மில்லியன் வாடிக்கையாளர்களும் எளிமையாக பணம் செலுத்த உதவும் என்று நிறுவனம் நம்புகிறது.

ரூ.399/- மதிப்புள்ள புதிய ரீஜார்ஜ் பேக்

ரூ.399/- மதிப்புள்ள புதிய ரீஜார்ஜ் பேக்

சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அதன் ரூ.399/- மதிப்புள்ள புதிய ரீஜார்ஜ் பேக் ஒன்றை ஜியோவிற்கு எதிராக களமிறங்கியுள்ளது. ஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கான இந்த புதிய திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில் - வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை வழங்குகிறது, உடன் 4ஜி வேகத்திலான 84 நாட்கள் செல்லுபடியாகும் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி என்ற டேட்டாவும் வழங்குகிறது.

ரூ.149/- ரீசார்ஜ்

ரூ.149/- ரீசார்ஜ்

ஜியோவின் ரூ.399/- ரீசார்ஜ் பேக்கை மட்டுமின்றி இதர ஜியோவின் குறைந்த விலை கட்டண திட்டங்களை எதிர்க்கும் வண்ணம் ஏர்டெல் மேலும் வேறு சில திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ரூ.149/- திட்டமானது ஏர்டெல் டூ ஏர்டெல் அழைப்புகள், 4ஜி வேகத்திலான 28 நாட்கள் செல்லுபடியாகும் 2ஜிபி தரவு ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ரூ.8/-  ரீசார்ஜ்

ரூ.8/- ரீசார்ஜ்

இதேபோல ஏர்டெல் நிறுவனம் ரூ.5 முதல் ரூ.399/- அதன் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.8/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக் ஆனது 56 நாட்களுக்கு ஏர்டெல் உள்ளூர் + எஸ்.டி.டி அழைப்புகளை நிமிடத்திற்கு 30 பைசா என்றவொரு விகிதத்தில் மேற்கொள்ள உதவும். ரூ.40/- மதிப்புள்ள ஏர்டெல் திட்டமானது, ரூ.35/-க்கான வரம்பற்ற பேச்சு நேரத்தை வழங்கும். மறுபக்கம் ரூ.60/- திட்டமானது ரூ.58/-க்கான வரம்பற்ற பேச்சு நேரத்தை வழங்கும்.

ரூ.5/- ரீசார்ஜ்

ரூ.5/- ரீசார்ஜ்

இருப்பதுலேயே மிகவும் மலிவான திட்டமான ரூ.5/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்கின் கீழ் 7 நாட்கள் செல்லுபடியாகும் 4ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு கிடைக்கும். இந்த சலுகையானது 4ஜி சிம் மேம்படுத்துதலுக்குப் பிறகு ஒரே முறை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.199/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்கின் கீழ் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வரம்பற்ற உள்ளூர் மொபைல் அழைப்புகள் மற்றும் 1ஜிபி அளவிலான 2ஜி / 3ஜி / 4ஜி தரவு நன்மைகள் கிடைக்கும்.

ரூ.349/- ரீசார்ஜ்

ரூ.349/- ரீசார்ஜ்

ரூ.349/- மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்கின் கீழ் 28 நாட்களுக்கு செல்லுப்படியாகும் நாள் ஒன்றிக்கு 1ஜிபி அளவிலான தரவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எல்.டி.டி. அழைப்புகளை அனைத்து கைபேசிகளுக்கும் வழங்குகிறது. இந்த ரூ.349/- திட்டத்தில் 10% கேஷ் பேக் ஆபர் பெற ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட் ஒன்றை துவங்குவதின் மூலம் பெறலாம்.

Best Mobiles in India

English summary
BSNL’s New Rs. 429 Plan Gives Up to 90GB Data, Unlimited Calls to Prepaid Subscribers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X