Home
News

பிஎஸ்என்எல் ரூ.186/-ல் அதிரடி திருத்தம்: அதிவேக 5ஜிபி, அதன்பின்னர் அன்லிமிடெட்.!

இந்த பிஎஸ்என்எல் 186 திட்டமானது மும்பை மற்றும் தில்லி தவிர, நாடு முழுவதிலும் உள்ள இதர வட்டங்களில் செல்லுபடியாகும், ஆனால் இந்த திட்டத்தின் விலை ஒவ்வொரு வட்டத்திற்கு ஏற்ப வேறுபடுகிறது.

By Muthuraj

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) தனது நுழைவு நிலை கட்டணத்திட்டமான ரூ.186/-ல் சில அதிரடி திருத்தங்களை நிகழ்த்தியுள்ளது. இனி பிஎஸ்என்எல் ரூ.186/- திட்டமானது 5 ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்கும்.

பிஎஸ்என்எல் ரூ.186-ல் திருத்தம்: அதிவேக 5ஜிபி அதன்பின்னர் அன்லிமிடெட்!

மேலும் இந்த முறை நிகழ்த்தப்பட்டுள்ள திருத்தத்தில் தனியார் தொலைதொடர்பு இயக்குனர்களின் பட்ஜெட் கட்டண திட்டங்கள் போன்றே எஸ்எம்எஸ் அனுகூலங்களையும் பிஎஸ்என்எல் வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் 186 திட்டமானது மும்பை மற்றும் தில்லி தவிர, நாடு முழுவதிலும் உள்ள இதர வட்டங்களில் செல்லுபடியாகும், ஆனால் இந்த திட்டத்தின் விலை ஒவ்வொரு வட்டத்திற்கு ஏற்ப வேறுபடுகிறது.

ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட்

ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட்

மும்பை மற்றும் தில்லி தவிர, லோக்கல் மற்றும் தேசிய ரோமிங்கில் வரம்பற்ற ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் குரல் அழைப்புகளை இந்த பிஎஸ்என்எல் 186 திட்டமானது முன்வைத்துள்ளது.

எம்டிஎன்எல் சேவை

எம்டிஎன்எல் சேவை

மும்பை மற்றும் டெல்லி இரண்டிலும், பிஎஸ்என்எல் சேவை கிடையாது, பதிலாக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான எம்டிஎன்எல் சேவைகள் கிடைக்கும் என்பதால் இந்த திட்டம் அங்கு செல்லுபடியாகாது.

தீர்ந்த பின்னர்

தீர்ந்த பின்னர்

தரவு நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.186/- வழங்கும் அதிவேக 5 ஜிபி டேட்டா தீர்ந்த பின்னர், அதன் தரவு வேகம் 40 கேபிபிஎஸ்-க்கு செல்கிறது. அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற திட்டமான ரூ.186/- போலவே டேட்டா நன்மையை வழங்குகிறது.

1000 இலவச  எஸ்எம்எஸ்

1000 இலவச எஸ்எம்எஸ்

மேலும், இந்த பிஎஸ்என்எல் ரூ.186/- ஆனது அதன் முழு செல்லுபடியாகும் காலத்தின் கீழ் மொத்தம் 1000 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் நாட்டிலுள்ள எந்த நெட்வொர்க்குக்கும் எஸ்எம்எஸ்-களை அனுப்ப முடியும்.

எந்தவொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும்

எந்தவொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும்

இந்த நன்மைகள் அனைத்தும் ரீசார்ஜ் நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். எந்தவொரு பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும் இந்த ரூ.186/-ஐ ரீசார்ஜ் செய்து அதன் நன்மைகளை அனுபவிக்க முடியும்.

கிடைக்கும் தன்மை

கிடைக்கும் தன்மை

இந்த திருத்தம் ஏற்கனவே பிஎஸ்என்எல் போர்ட்டலில் காட்சிப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரத்தில் இந்த திட்டத்தின் கிடைக்கும் தன்மையை உறுதி செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Plan 186 Revised to Offer High-Speed 5GB Data and 1000 SMS for 28 Days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X