Home
News

Google Pay, PhonePe, Paytm இனி எதுக்கு.. BSNL Pay வரப்போகுது.. இதுல UPI பேமெண்ட்கள்.. என்னென்ன வரும்?

ஒட்டுமொத்த பிஎஸ்என்எல் (BSNL) கஸ்டமர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி அந்த நிறுவனம் யுபிஐ பேமெண்ட்கள் சேவையை கொடுக்க இருக்கிறது. பிஎஸ்என்எல் பே (BSNL Pay) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் சேவைகளை கொடுக்க இருக்கிறது. கூகுள் பே (Google), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்கள் மட்டுமல்லாமல், ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) நிறுவனங்களின் பேமெண்ட் ஆப்களுக்கும் போட்டியாக களமிறங்க இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் யுபிஐ பேமெண்ட்களை தவிர்த்துவிட்டு, தினசரி பணப்பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. அந்த அளவுக்கு பெட்டிக்கடைகள் முதல் சூப்பர் மார்கெட்கள் வரையில் யுபிஐ சேவைகள் வந்துவிட்டன. இதற்காக எந்த கட்டணங்களும் இல்லாமல் இருப்பதால், நாளுக்கு நாள் அதை பயன்படுத்தும் பேங்க் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Google Pay, PhonePe, Paytm இனி எதுக்கு.. BSNL Pay வரப்போகுது!

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் மட்டுமல்லாமல், டெலிகாம் நிறுவனங்களும் யுபிஐ சேவைகளை கொடுக்க தொடங்கிவிட்டன. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலம் பார்தி ஏர்டெல் நிறுவனம் யுபிஐ சேவைகளை கொடுக்கிறது. அதேபோல ஜியோபே (Jio Pay) ஆப் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் யுபிஐ சேவைகளை கொடுத்து வருகிறது.

ஆனால், யுபிஐ பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் யுபிஐ பேமெண்ட்களை கொடுக்கும்படி சேவை கிடைக்கவில்லை. இது இப்போது அடியோடு மாற இருக்கிறது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை போலவே தனது கஸ்டமர்களுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் யுபிஐ சேவைகளை கொடுக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் (BSNL Selfcare App) மூலமாக இந்த சேவை கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கான பேனர் அந்த பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப்-இல் இடம்பெற்றுள்ளது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் பே ஆப் எப்போது வெளியாகும் என்பது குறித்த விவரங்கள் வெளியாவில்லை. விரைவில் கிடைக்க இருப்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அதோடு பீம் யுபிஐ (BHIM UPI) மூலமாக இந்த யுபிஐ சேவைகள் கொடுக்கப்படும் என்பதும் அந்த பேனர் மூலம் உறுதியாகி இருக்கிறது. பீம் யுபிஐ ஆனது மத்திய அரசுக்கு சொந்தமான என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

ஆகவே, இதில் கிடைக்கும் யுபிஐ சேவைகள் நேரடியாக மத்திய அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப இருக்கும் என்பதால், கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது. ஆகவே, ஜியோபே மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மட்டுமல்லாமல், கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற ஆப்களுக்கும் நிகரான சேவைகளை கொடுக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய சேவைகளை தொடங்கி இருக்கிறது. பிஎஸ்என்எல் ஐபிடிவி (BSNL IPTV) சேவை மூலம் இன்டர்நெட் இல்லாமலேயே ஃபைபர் அடிப்படையில் லைவ் டிவி சேனல்களை கொடுக்க தொடங்கி இருக்கிறது. அதேபோல பிஎஸ்என்என் வை-பை ரோமிங் சேவையை கொடுக்க தொடங்கி இருக்கிறது.

பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை நாடு முழுவதும் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. இப்படி, ஒட்டுமொத்தமாக புதிய உருவம் எடுத்து வருகிறது. இப்போது, பிஎஸ்என்எல் பே மூலம் யுபிஐ பேமெண்ட்களின் சேவைகளை கொடுக்க தயாராகிவிட்டது. இதனால், பிஎஸ்என்எல் கஸ்டமர்களிடையே மீண்டும் நல்வ வரவேற்பை பெற தொடங்கி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
BSNL Pay For UPI Payments Coming Soon May Integrate With BHIM UPI
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X