Home
News

நீ ஏறி ஆடு கபிலா.. இது நம்ம காலம்.. இந்தியாவில் முழுவதும் உள்ள 2G, 3G, 4G BSNL கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

பான்-இந்தியா அடிப்படையிலான 4ஜி நெட்வொர்க் அறிமுகத்தை தொடர்ந்து, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது அமைதியாக "இன்னொரு" பான்-இந்தியா அடிப்படையிலான சேவையை தொடங்கியுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆனது டாடா கம்யூனிகேஷன்ஸ் (Tata Communications) உடன் இணைந்து பான்-இந்தியா இசிம் சேவைகளை (eSIM Services) வழங்குவதாக அறிவித்துள்ளது.

நினைவூட்டும் வண்ணம் மிகவும் சமீபத்தில் தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இசிம் சேவை ஆனது சென்னையில் உள்ள கஸ்டமர்களுக்கு (BSNL Chennai Customers) அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பிஎஸ்என்எல்-ன் இசிம் சேவை ஆனது நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு உடனடியாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

2G, 3G, 4G BSNL கஸ்டமர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆனது அதன் அதிநவீன, ஜிஎஸ்எம்ஏ (GSMA) அங்கீகாரம் பெற்ற இசிம் சந்தா மேலாண்மை தளம் (eSIM Subscription Management Platform) ஆன டாடா கம்யூனிகேஷன்ஸ் மூவ் (Tata Communications MOVE) மூலம் பிஎஸ்என்எல்-ன் இசிம் சேவையை மேம்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.

அதாவது இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இசிம் சேவையை வழங்க பிஎஸ்என்எல் இந்த தளத்தை பயன்படுத்தும். இதுவரை, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இசிம் சேவைகளை வழங்கி வந்தன. இந்நிலையில் "நீ இறங்கி ஆடு கபிலா.. இது நம்ம காலம்" என்று கூறும்படியாக பிஎஸ்என்எல் நிறுவனமும் அதை செய்ய தொடங்கியுள்ளது.

சுவாரசியமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இசிம் ஆனது 2ஜி (2G), 3ஜி (3G) மற்றும் 4ஜி (4G) நெட்வொர்க் பயனர்களுக்கு வேலை செய்யும். சிங்கிள் சிம் ஸ்லாட்டும், மற்றொன்றை இசிம் ஆகவும் கொண்ட பல டிவைஸ்கள் இப்போது இந்த பிஎஸ்என்எல் இசிம்-ஐ பயன்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பான்-இந்தியா இசிம் சேவையை வழங்குவது உண்மையிலேயே ஒரு பெரிய வளர்ச்சியாகும். அரசு நடத்தும் இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் ஆனது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிட அதன் சேவைகளை வேகமாக மேம்படுத்தி வருகிறது.

ஸ்டாண்டர்ட் கனெக்ஷன் ஆக இருந்தாலும் சரி அல்லது வயர்லெஸ் பிரிவாக இருந்தாலும் சரி, அல்லது சாட்காம் என்கிற சாட்டிலைட் கம்யூனிகேஷன் ஆக இருந்தாலும் சரி, பிஎஸ்என்எல் ஆனது எல்லா இடங்களிலும் போட்டியிட முயற்சிக்கிறது. இது இந்தியாவிற்கும் நல்லது, கூடவே நுகர்வோருக்கும் நல்லது

ஆனால் உண்மையான ஆட்டம் - பிஎஸ்என்எல் 5ஜி -யின் விரைவான அறிமுகத்தில் தான் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மும்பை மற்றும் டெல்லியில் பிஎஸ்என்எல் 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து 5ஜி சேவைகளும் விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டால்.. உண்மையிலேயே ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆட்டம் காணும்!

பிஎஸ்என்எல் சென்னை டெலிபோன்ஸ்-ன் (BSNL Chennai Telephones) 2 முக்கிய அறிவிப்புகள்: உள்ளூர் சந்தாதாரர்களுக்கான இசிம் சேவைகளை (eSIM Services) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது மற்றும் ஸ்டார்ஹப் சிங்கப்பூர் (StarHub Singapore) உடன் இணைந்து எல்டிஇ (LTE) வழியிலான சர்வதேச ப்ரீபெய்ட் ரோமிங்கை (International prepaid roaming) அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

சென்னை பயனர்களுக்கான இசிம்: சென்னையில் உள்ள சென்னை வாடிக்கையாளர்களுக்கு இப்போது கிடைக்கும் இசிம் சேவை ஆனது பிஸிக்கல் சிம் கார்டுகளுக்கான தேவையை நீக்குகிறது. இசிம் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களில் நேரடியாக உட்பொதிக்கப்படும் இசிம் ஆனது எளிதான ஆக்டிவேஷன், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் ஒரே டிவைஸில் மல்டிபிள் ஆபரேட்டர் ஃப்ரொபைல்களை ஹோஸ்ட் செய்யும் திறனை உறுதியளிக்கிறது.

"சிம் இல்லை, வரம்புகள் இல்லை - பிஎஸ்என்எல் இசிம் இப்போது சென்னை போன்களில்" என்கிற வரியின் கீழ் சந்தைப்படுத்தப்படும் இந்த சேவை, ஏற்கனவே இசிம் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்ட உலகளாவிய சகாக்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிலைநிறுத்துகிறது. வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் இன் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது நிறுவனத்தின் ஹெல்ப்லைனை அழைப்பதன் மூலமாகவோ இசிம் வசதியை ஆக்டிவேட் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL PAN India eSIM Service Announced BSNL eSIM will work for 2G 3G 4G network Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X