Home
News

தமிழ்நாட்டுல கேபிள் டிவி சேப்டர் க்ளோஸ்.. மாசத்துக்கு வெறும் ரூ.49 செலவுல.. BSNL-ன் புது ஆட்டம்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது மாதம் ரூ.29-க்கு ஜியோசினிமா (JioCinema) சந்தாவை அறிவித்து.. ஒடிடி மற்றும் கேபிள் டிவி மார்க்கெட்டில் புதிய புரட்சியை உண்டாக்கயு ள்ள நிலையில் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது தன் பங்கிற்கு ஒரு வேலையை பார்த்துள்ளது.

பிஎஸ்என்எல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது சினிமாபிளஸ் (Cinemaplus) எனப்படும் தனது ஓடிடி சேவையின் மீது தற்போது 50% தள்ளுபடியை அறிவித்துள்ளது. வழக்கமாக, இது மாதத்திற்கு ரூ.99 க்கு கிடைக்கும், ஆனால் இப்போது, ​​வெறும் ரூ.49-க்கு ஸ்டார்டர் பேக்கை பெற முடிகிறது.

மாசத்துக்கு வெறும் ரூ.49 செலவுல.. BSNL-ன் புது ஆட்டம்!

பிஎஸ்என்எல் சினிமாபிளஸ் ஸ்டார்டர் பேக்கின் கீழ் என்னென்ன கிடைக்கும்? இதன் கீழ் லயன்ஸ்கேட் (Lionsgate), ஷீமாரோ மீ ( ShemarooMe), ஹங்காமா (Hungama) மற்றும் எபிக் ஆன் (Epic On) உள்ளிட்ட பல ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி தற்போது இது ரூ.99 க்கு பதிலாக ரூ.49 க்கு கிடைக்கிறது.

சினிமாபிளஸ் சேவையின் கீழ் ஃபுல் பேக்கும் (Full Pack) உள்ளது! இதன் கீழ் ஜீ5 (ZEE5), சோனி லைவ் (SonyLIV), யப் டிவி (YuppTV )மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) போன்ற ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். இதன் விலை மாதம் ரூ.199 ஆகும்.

மாசத்துக்கு வெறும் ரூ.49 செலவுல.. BSNL-ன் புது ஆட்டம்!

கடைசியாக சினிமாபிளஸ் சேவையின் கீழ் பிரீமியம் பேக்கும் (Premium Pack) உள்ளது! இதன் விலை மாதத்திற்கு ரூ.249 ஆகும். இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஜீ5, சோனி லைவ், யப் டிவி, லயன்ஸ் கேட், ஷீமாரோ மீ, ஹங்காமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும். பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வாடிக்கையாளர்கள் மேற்கண்ட ஒடிடி திட்டங்களை வாங்கலாம்.

நீங்களொரு பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வாடிக்கையாளர் என்றால்.. நீங்கள் பிஎஸ்என்எல் சினிமாபிளஸ் சேவைக்கான அணுகலை பெற விரும்பினால், பிஎஸ்என்எல் சினிமாப்ளஸின் இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு விருப்பமான திட்டத்தை வாங்கி, உங்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்கத் தொடங்கலாம். இதற்கான சந்தா கட்டணம் உங்களுடைய பிராட்பேண்ட் பில்லில் சேர்க்கப்படும், அதாவது தனியாக வசூலிக்கப்படாது.

மாசத்துக்கு வெறும் ரூ.49 செலவுல.. BSNL-ன் புது ஆட்டம்!

அதாவது பிஎஸ்என்எல்-ன் சினிமாபிளஸ் சேவையானது பயனர்களுக்கு ஒரே லாக்-இன் மூலம் பல ஓடிடி தளங்களில் உள்ள கன்டென்ட்டிற்கான அணுகலை வழங்கும். ஏர்டெல் வழங்கும் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளேவை (Airtel Xstream Play) போலவே இதுவும் ஒரு ஒருங்கிணைந்த ஓடிடி சேவையாகும். ஜியோடிவி ப்ரீமியம் (JioTV Premium) மற்றும் டாடா பிளே பிங்கே (Tata Play Binge) போன்றவைகளையும் எடுத்துக்காட்டாக கூறலாம்.

நீங்களொரு பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வாடிக்கையாளர் என்றால்.. நீங்கள் பிஎஸ்என்எல் சினிமாபிளஸ் சேவைக்கான அணுகலை பெற விரும்பினால், பிஎஸ்என்எல் சினிமாப்ளஸின் இணையதளத்திற்கு சென்று தங்களுக்கு விருப்பமான திட்டத்தை வாங்கி, உங்களுக்கு பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்கத் தொடங்கலாம். இதற்கான சந்தா கட்டணம் உங்களுடைய பிராட்பேண்ட் பில்லில் சேர்க்கப்படும், அதாவது தனியாக வசூலிக்கப்படாது.

சமீபத்தில் அறிமுகமான 2 புதிய ஜியோ சினிமா (JioCinema) திட்டங்களை.. புதிய திட்டங்கள் என்றும் கூறலாம் அல்லது அதன் பிரீமியம் சந்தா திட்டத்தின் மீதான விலைக்குறைப்பு என்றும் கூறலாம். முன்னதாக இது மாதத்திற்க்கு ரூ.99க்கு அணுக கிடைத்தது. இனிமேல் இது மாதத்திற்கு வெறும் ரூ.29க்கு அணுக கிடைக்கும்.

அதாவது ஜியோ நிறுவனமானது அதன் ஓவர்-தி-டாப் (ஓடிடி) பிளாட்ஃபார்மின் விலையை மூன்றில் இரண்டு பங்கு குறைத்துள்ளது. ரூ.99 சந்தா திட்டமானது, 1 ஆண்டு திட்டமாகவும் (ரூ.999 க்கு) அணுக கிடைத்தது. இவ்விரு திட்டங்களுமே விளம்பரங்கள் இல்லாமல் ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்கின.

புதிய ரூ.29 திட்டமானது 1 டிவைஸ்க்கான ஆதரவை மட்டுமே வழங்கும். ஆனால் மற்றொரு புதிய திட்டமான ரூ.89 ஆனது பழைய ரூ.99-ஐ போலவே 4 டிவைஸ்களுக்கான ஆதரவை வழங்கும். மாதத்திற்கு ரூ.89 என்கிற செலவின்கீழ் கிடைக்கும் இந்த திட்டம் "ஜியோசினிமா பேமிலி பிளான்" என்று அழைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL OTT Service Cinema Plus Now Available For Juts Rs 49 Per Month Check Rs 199 Rs 249 Plans Also
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X