Home
News

தம்பி ஓரமா போ.. மாசம் ரூ.167-க்கு 12 மாத வேலிடிட்டி.. BSNL-க்கு கும்பிடு.. வாய்ஸ் கால்கள்.. 600 ஜிபி டேட்டா!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, அதனுடைய 5ஜி சேவையின் பெயரை க்யூ-5ஜி (Q-5G) என்று குறிப்பிட்டுள்ளது. குவாண்டம் 5ஜி (Quantum 5G) என்பதன் சுருக்கத்தையே இது குறிக்கிறது. 4ஜி சேவைகளுக்கு பிறகு 5ஜி சேவைகளில் கவனம் செலுத்த இருக்கிறது. இதனால், கஸ்டமர்கள் குஷியாக இருக்கின்றனர். இந்த நேரத்தில் மாதத்துக்கு ரூ.167 செலவில் 12 மாத வேலிடிட்டி மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்கள் மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகளை கொடுக்கும் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இது 5ஜி திட்டம் கிடையாது.

இந்தியாவில் அடிமட்ட விலையிலான ப்ரீபெய்ட் திட்டங்கள் பிஎஸ்என்எல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்களில் மட்டுமே கிடைக்கின்றன. அதிலும், ஜியோ நிறுவனத்தில் ஜியோபோன்களுக்கான திட்டம் மட்டுமே அடிமட்ட விலைக்கு இருக்கிறது. ஆகவே, ஸ்மார்ட்போன்களை எடுத்து கொண்டால், ஜியோவை ஓரம்கட்டி பிஎஸ்என்எல் மட்டுமே தொடர்ந்து மலிவான விலைக்கு திட்டங்களை வைத்திருக்கிறது.

தம்பி ஓரமா போ.. மாசம் ரூ.167-க்கு 12 மாத வேலிடிட்டி.. BSNL-க்கு வருது!

பிஎஸ்என்எல் ரூ 1999 ஒரு வருட திட்டம் (BSNL Rs 1999 One Year Plan): பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு லம்ப்-சம் டேட்டாவுடன் வருடாந்திர திட்டம் வேண்டுமானால், இதை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், இந்த திட்டத்துக்கு 600 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, நாளொன்றுக்கு 1.5 ஜிபிக்கும் அதிகமான டேட்டாவானது பயன்படுத்த கிடைக்கிறது.

ஆனால், இது லம்ப்-சம் சலுகையில் கிடைப்பதால், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் தேவைப்படும் நேரத்தில் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த லம்ப்-சம் டேட்டாவுக்கும் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கிடைக்கிறது. ஆகவே, 600 ஜிபி டேட்டாவை வேலிடிட்டிக்கு முன்பாகவே முடித்துவிட்டாலும், 40 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும்.

தம்பி ஓரமா போ.. மாசம் ரூ.167-க்கு 12 மாத வேலிடிட்டி.. BSNL-க்கு வருது!

இந்த டேட்டா சலுகையே அதிகமாக இருக்கிறது. ஆனால், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. டேட்டாவுக்கு அடுத்து அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் (National Roaming Voice Calls) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. எஸ்எம்எஸ் சலுகைகள் லம்ப்-சம்மில் கிடையாது.

தினசரி லிமிட்டில் வழக்கமாக கிடைக்கும் 100 கணக்கில் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, 12 மாதங்களுக்கு டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை பெற்று கொள்ளலாம். இதை ஒரு மாதத்துக்கு கணக்கிட்டால், ரூ.167 விலைக்கே சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது மற்ற நிறுவனங்களைவிட மலிவாகும்.

ஆனால், பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் நாடு முழுவதும் கிடைக்காததால், டேட்டா வேகத்தில் மட்டும் குறை இருக்கலாம். இருப்பினும், 4ஜி சேவை கிடைக்கும் பகுதியில் இருக்கும் கஸ்டமர்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை வருடம் முழுவதும் விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் பக்கா தேர்வாக இருக்கும். இதேபோ போல சலுகைகள் மாதத்துக்கு வேண்டுமா?

அப்படியானால், பிஎஸ்என்எல் ரூ 199 திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் மாதத்துக்கு வேலிடிட்டி கிடைக்கும். மேலும், தினசரி டேட்டா, போஸ்ட் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளையும் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை பார்த்தால், முந்தைய திட்டம் எப்படி மலிவான மாதாந்திர விலைக்கு கிடைக்கிறது என்பது தெரியவரும்.

இந்த 30 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை வருகிறது. முந்தைய திட்டத்தில் கொடுக்கப்பட்ட அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, ஒரே மாதத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போது, வருடத்துக்கு ரீசார்ஜ் செய்யும்போதும் விலை மாற்றங்கள் இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL One Year Prepaid Plan Comes With Voice Calls Lumpsum Data At Rs 1999 Check Monthly Expense
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X