பிஎஸ்என்எல் சிறப்பு தீபாவளி சலுகையை அறிவித்தது.!
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.1,699 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன் சலுகைகளை 365 நாட்களுக்கு வழங்குகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் கூட தீபாவளி சிறப்பு சலுகையை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம்
அறிவித்துள்ள இந்த சிறப்பு தீபாவளி சலுகை பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

இப்போது பிஎஸ்என்எல் அறிவித்த சிறப்பு சலுகை என்னவென்றால் பயனர்களுக்கு கூடுதலாக டாக்டைம் வசதியை அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை அனைத்து வட்டாரங்களிலும் அக்டோபர் 25-ம் தேதி முதல் நவம்பர் 11-ம் தேதி வரை வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் கூடுதலாக டாக்டைம் சலுகையை ரூ.190, ரூ.180, ரூ.410, ரூ.440 ரூ.555 போன்ற திட்டங்களில் அறிவித்துள்ளது, இருந்தபோதிலும் மொபைல் டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்கவில்லை பிஎஸ்என்எல்
நிறுவனம்.

சிறப்பு வருடாந்திர திட்டங்கள்:
மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் பிரீபெய்ட் பயனர்களுக்கு வருடாந்திர சிறப்பு திட்டங்களை அறிவித்தது, இந்த ரூ.1,699 மற்றும் ரூ.2,099 திட்டங்கள் கண்டிப்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

ரூ.1,699 திட்டம்:
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.1,699 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள், 100எஸ்எம்எஸ் போன் சலுகைகளை 365 நாட்களுக்கு வழங்குகிறது.

ரூ.2,099 திட்டம்:
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.1,699 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 4ஜிபி டேட்டா, இலவச கால் அழைப்புகள்,100எஸ்எம்எஸ் போன் சலுகைகளை 365 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த இரண்டு திட்டங்களும் அக்டோபர் 29-ம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications