Home
News

கலக்கும் பிஎஸ்என்எல் : வெல்கம் ஆபர்; ரூ.8/- மற்றும் ரூ.19/- ரீசார்ஜ் அறிமுகம்.!

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் பொருந்தும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

By Muthuraj

டெலிகாம் துறையில் நிலவும் தீவிர போட்டி காரணமாக, பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ஜியோ பாணியிலான ""வெல்கம் ஆபரை" அறிவித்துள்ளது.

கலக்கும் பிஎஸ்என்எல் : வெல்கம் ஆபர்; ரூ.8/- மற்றும் ரூ.19/- ரீசார்ஜ் அ

இந்த புதிய ஆபரின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு 500 எம்பி அளவிலான இலவச மொபைல் டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. அதாவது பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மொபைல் சேவைகளின் கீழ் இணையும் புதிய இணைப்புகளுக்கு 500/350 எம்பி அளவிலான டேட்டா இலவசமாக கிடைக்கும்.

எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் பொருந்தும்

எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் பொருந்தும்

பிஎஸ்என் இணையத்தளத்தில் "வெல்கம் ஆபர்" என்று அழைக்கப்படும் இந்த விளம்பரத் திட்டமானது, வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் பொருந்தும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

30 நாட்களுக்குள்

30 நாட்களுக்குள்

இந்த இலவச 500 எம்பி டேட்டாவை சேவையை அணுகப்பெற்ற முதல் 30 நாட்களில் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் இந்த திட்டம், கிழக்கு மண்டல வாடிக்கையாளர்களுக்கு முதல் 3 நாட்களுக்கான வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகளையும், இதர மண்டல வாடிக்கையாளர்களுக்கு (30 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டிய) 350 எம்பி டேட்டாவையும் வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.8/- மற்றும் ரூ.19/- திட்டங்கள்

ரூ.8/- மற்றும் ரூ.19/- திட்டங்கள்

பிஎஸ்என்எல், குறைந்த விலையிலான அழைப்பு திட்டங்களையும் வழங்கி வருகிறது. அதன் கீழ், தற்போது ரூ.8/- மற்றும் ரூ.19/- திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்ககள் செப்டம்பர் 4, 2017 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ரூ.8/-

ரூ.8/-

பிஎஸ்என்எல் அதன் எஸ்டிவி ரூ.8/- திட்டமானது, நிமிடத்திற்கு 15 பைசா என்ற விகிதத்தில் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகளை வழங்கும். இந்த திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ரூ.19/-

ரூ.19/-

பிஎஸ்என்எல் எஸ்டிவி ரூ.19/- திட்டமானது, நிமிடத்திற்கு 15 பைசா என்ற விகிதத்தில் பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் அழைப்புகளையும், 35 பைசா என்ற விகிதத்தில் இதர நெட்வெர்க் உடனான அழைப்புகளை வழங்கும். இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

பிஎஸ்என்எல் நாடு முழுவதும் பல தொலைத் தொடர்பு வட்டங்களில் அதன் சேவைகளை வழங்குகிறது. ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு, காஷ்மீர், கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவை அடங்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Offers Up To 500 MB Data Free To New Prepaid Customers. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X