Home
News

வெறும் ரூ.26/-க்கு பிஎஸ்என்எல் அன்லிமிடெட் அதிரடி.!

தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு இது செல்லுபடியாகும்.!

By Muthuraj

ஏர்டெல் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தான் ரிலையன்ஸ் ஜியோவுடன் கடுமையான கட்டண யுத்தத்தை நிகழ்த்தும் என்று நாம் யூகித்து கொண்டிருக்க மறுபக்கம் சத்தமில்லாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் அதிரடி சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாய் ரூ.1/-க்கு 1ஜிபி என்ற விலையில் நாள் ஒன்றிற்கு 10ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் அதன் திட்டத்தை கூறலாம்.

ஜியோ நிறுவனத்தையே வாய்பிளக்க வைத்த அபாரமான திட்டங்களில் அதுவும் ஒன்றாகும். அதற்கு அடுத்தபடியாக பிஎஸ்என்எல்-ன் ரூ.26/-திட்டம் திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.!

செல்லுபடி

செல்லுபடி

பிஎஸ்என்எல், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் வண்ணம் அதன் பல்வேறு விளம்பர திட்டங்களின் செல்லுபடி காலத்தை நீட்டித்துள்ளது.

ரூ.26/- திட்டம்

ரூ.26/- திட்டம்

அந்த பட்டியலில் ரூ.26/- திட்டமும் அடக்கம். இந்த எஸ்டிவி 26-ன் கீழ் நீங்கள் 26 மணி நேரத்திற்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை நிகழ்த்திக் கொள்ளலாம்.

எஸ்டிவி 26 பேக்

எஸ்டிவி 26 பேக்

இந்த எஸ்டிவி 26 பேக் முதலில் மார்ச் 31, 2017 அன்று காலாவதியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் மூன்று மாதங்களுக்கு இது செல்லுபடியாகும் என்று விரிவுபடுத்தி அறிவித்துள்ளது.

ரூ.1/- என்ற விலையில்

ரூ.1/- என்ற விலையில்

இந்த ரூ.26/- திட்டமானது ஒரு மணி நேரத்திற்கு ரூ.1/- என்ற விலையில் வெளிப்படையாக 26 மணி நேரத்திற்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.இது ஒப்பீட்டில் மற்ற தொலைதொடர்பு இயக்குனர்கள் வலனாகும் சலுகைகளை விட சிறப்பான ஒன்றாகும்.

வட்டத்துக்குள்

வட்டத்துக்குள்

இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் ஆஃப் நெட் மற்றும் ஆன் நெட் அழைப்புகளை செய்யலாம். எனினும், இந்த அழைப்புகள் ஹோம் வட்டத்துக்குள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஆப்ரேட்டர் வட்டத்தில் இருந்து வெளியே நிகழ்த்தும் அழைப்புகளுக்கு நிலையான கட்டண குரல் விகிதங்கள் படி கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அட்டகாசம் போங்க..! 4ஜி சிம் ஸ்லாட் கொண்ட ஜியோ 4ஜி லேப்டாப்.!

Best Mobiles in India

English summary
BSNL offers unlimited voice calls at Rs 26. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X