குறைந்த விலையில் தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அசரவைக்கும் BSNL திட்டங்கள்..
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மலிவு விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்க உள்ளது.
அதாவது தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே விரைவில் இந்நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.300-க்கு கீழ் அதிக நன்மைகளை வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 228 plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் Arena மொபைல் கேமிங் சேவை, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 247 plan) ஆனது மொத்தமாக 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ரூ.10 மதிப்பிலான டால்க் வேல்யூ (Talk Value) உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. குறிப்பாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 269 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.269 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளன. மேலும் Arena மொபைல் கேமிங் சேவை, BSNL ட்யூன்ஸ், ஆஸ்ட்ரோடெல் (Astrotell), ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ 298 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 298 plan) தினமும் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 52ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 299 plan) தினமும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் 30 நாட்கள் வேலிடிட்டி ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் . மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் உள்ளன.


Click it and Unblock the Notifications