டேட்டா மற்றும் ஸ்பீட் லிமிட் இல்லாத ஆபர் - பிஎஸ்என்எல் அதிரடி.!
பிஎஸ்என்எல் நாட்டின் பிற தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களுக்கு ஒரு கடுமையான போட்டி கொக்கும் நோக்கத்தில் அதன் தரவு எல்லை, வேக வரம்பு எல்லை இல்லாத வரம்பற்ற தரவு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
பிஎஸ்என்எல் ஏற்கனவே 2017-இல் நாடு முழுவதிலுமான வரம்பற்ற குரல் அழைப்புகளை அறிமுகப்படுத்தும், குறிப்பாக ரிலையன்ஸ் மற்ற தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களுக்கு எதிராக கடும் போட்டியை முன்னெடுக்கும் என்று அறிவித்திருந்தது.
சமீபத்தில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சலுகைகள் ஹேப்பி நியோ இயர் ஆபர் என்ற பெயரின் கீழ் மார்ச் 31, 2017 வரை நீடிக்கப்படுவதை அறிவித்த பின்னர் அனைத்து தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்களுக்கும் அதிக அளவிலான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதன் ஒரு விளைவாகத்தான் ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான கவுன்டர் அட்டாக்கை நிகழ்த்த பிஎஸ்என்எல்அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான ஒரு புதிய 3ஜி தரவு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

எல்லை வரம்பற்ற 3ஜி
பிஎஸ்என்எல்-ன் கூற்றுப்படி எஸ்டிவி498 என்ற ஒரு புதிய தரவு திட்டம் தொடங்கப்பட்டு பயனர்களுக்கு எல்லை வரம்பற்ற 3ஜி டேட்டா வழங்கப்படும் அதாவது நாள் ஒன்றிற்கு 1ஜிபி தரவு எல்லை கொண்ட ஜியோவின் சலுகை போலில்லாமல் எல்லை வரம்பற்ற தரவை வழங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

என்ன வித்தியாசம்
ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆபர் ஆனது பயனர்கள் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை அணுக வாய்ப்பு வழங்குகிறது அதன் பின்னர் அதிவேக இணையத்தை வாடிக்கையாளர்களால் பெற இயலாது. அதற்கு ரீசார்ஜ் நிகழ்த்த வேண்டியது இருக்கும். ஆனால், பிஎஸ்என்எல்-ன் புதிய வரம்பற்ற 3ஜி தரவுத் திட்டத்தை பொருத்தமட்டில் எந்தவிதமான டேட்டா பயன்பாடு எல்லையும் கிடையாது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

காலாவதி
இந்த இரண்டு திட்டங்களுக்கும் இடையே உள்ள மற்றொரு முக்கிய வேறுபாடு என்னவென்றால் பிஎஸ்என்எல்-ன் வரம்பற்ற தரவு திட்டம் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து தொடங்கி 14 நாட்கள் செல்லுபடியாகும். ஆனால் மறுபக்கம் ரிலையன்ஸ் ஜியோவின் சலுகை ஜனவரி 1, 2017 தொடங்கி 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் உள்ளது.

இத்திட்டத்தின் நன்மைகள் :
#1 புதிய மற்றும் தற்போதைய பயனர்கள் ஆகிய இருவருக்கும் செல்லுபடியாகும்
#2 ஹேப்பி நியூ இயர் ஆபர்போல எந்த விதமான டேட்டா பயன்பாடு எல்லையம் கிடையாது
#3 அதே போல ஹேப்பி நியூ இயர் ஆபர் போல எந்தவிதமான டேட்டா ஸ்பீட் எல்லையும் கிடையாது

ஒரே நெட்வொர்க்
தகவல்களின்படி, முழு இந்திய தொலைத் தொடர்பு துறையிலும், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தான் எந்த விதமான டேட்டா லிமிட்களும் மற்றும் டேட்டா ஸ்பீட் லிமிட்களும் இல்லாத முற்றிலும் வரம்பற்ற தரவு பொதிகளை வழங்கும் ஒரே நெட்வொர்க் ஆகும். பிஎஸ்என்எல் தொலை தொடர்பு ஆப்ரேட்டர் மற்ற அனைத்துநிறுவனங்களையும் குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோவையும் அதன் இலவச சேவைகளையும் எதிர்ப்பதற்காக தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எஸ்டிவி1099
முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிஎஸ்என்எல் எந்த தரவு அல்லது வேக வரம்பும் இல்லாத 30 நாட்கள் செல்லுபடியாகும் எஸ்டிவி498 போன்றே எஸ்டிவி1099 என்ற வரம்பித்தார் 2ஜி/3ஜி டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இதுதான் அம்பானியின் மாஸ்டர் பிளான், ஜியோவின் பின்னணி என்ன.?!


Click it and Unblock the Notifications