Home
News

கம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.! என்னென்ன திட்டங்கள்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் ஏர்டெல், ஜியோ,வோடபோன் நிறுவனங்களுக்கு போட்டியாக மலிவு விலையில் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெருகிறது என்றுதான் கூறவேண்டும்.

கம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.!

மேலும் இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பெஸ்ட் டேட்டா எஸ்.டி.வி வழியாக அதன் பயனர்களுக்கு வரம்பற்ற டேட்டாவை எந்த வேக கட்டுப்பாடுகளும் இல்லாமல் வழங்குகிறது. இப்படியொரு சலுகையை மற்ற தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் யாருமே செய்யவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த நிறுவனத்திடம் work from home (WFH) டேட்டா எஸ்.டி.வி.களும் உள்ளன. மேலும் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து பெஸ்ட் டேட்டா எஸ்.டி.வி-களின் பட்டியலைப் பார்ப்போம்.

கம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.!

பிஎஸ்என்எல் STV 97
இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.97-ஆக உள்ளது. குறிப்பாக 18 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். மேலும் ஓவ்வொரு நாளும் 250 நிமிட வரம்பற்ற அழைப்பையும் 2 ஜிபி தினசரி டேட்டாவையும் கூடுதலாக தினமும் 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம். பின்பு இந்த திட்டம் வழங்கும் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பின்பு இணைய வேகம் 80 Kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் டேட்டா WFH_151
பிஎஸ்என்எல் டேட்டா டபிள்யூஎஃப்எச்_151 திட்டத்தின் மதிப்பு ரூ.151-ஆக உள்ளது. இந்த திட்டம் பயனர்களுக்கு மொத்தமாக 40 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. பின்பு 28 நாட்களுக்கு ஜிங்கின் இலவச சந்தாவையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

கம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.!

பிஎஸ்என்எல் டேட்டா STV_198

பிஎஸ்என்எல் டேட்டா STV_198 ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி அளிவான டேட்டா, இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங் டோன் போன்ற நன்மைகள் கிடைக்கும். மேலும் இந்த திட்டம் 54 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. அதேபோல் தினசரி டேட்டா அளவை மீறிய பின்னர் இணைய வேகம் 40 Kbps ஆக குறையும்.

கம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.!

பிஎஸ்என்எல் டேட்டா WFH_251
பிஎஸ்என்எல் டேட்டா WFH_251 திட்டமானது 70 ஜிபி அளவிலான டேட்டாவையும், ZING மீதான இலவச சந்தாவையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் டேட்டா STV_998

பிஎஸ்என்எல் டேட்டா STV_998 திட்டமானது 300 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் பயனர்களுக்கு 2ஜிபி அளவிலான டேட்டா, 2 மாதங்களுக்கு இலவச ரிங் டோன், இலவச லோக்தூம் கன்டென்ட் ஆகியவைகளை வழங்குகிறது. குறிப்பாக முதல் 240 நாட்கள் வரை மட்டுமே லோக்தூம் சேவை இலவசமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்மி விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.!

பிஎஸ்என்எல் டேட்டா 1098
பிஎஸ்என்எல் டேட்டா 1098 வவுச்சர் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வரை பயனர்கள் எந்த வேக கட்டுப்பாடுகளும் இல்லாமல் வரம்பற்ற டேட்டாவைப் பெறுவார்கள். அதேபோல் இந்த திட்டத்தின் கீழ் இலவச ரிங் டோனுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL Offers Unlimited Data in Without Speed Restriction From Stv Recharge Plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X