Home
News

அள்ளி தரும் BSNL.. ரூ.500 போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. உடனே முந்துங்க..

வோடபோன் ஐடியா நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் 5ஜி சேவையை இந்தியா முழுவதும் வழங்கும். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் இன்றும் சில மாதங்களில் தனது 4ஜி சேவை இந்தியாவில் வழங்க உள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் ரூ.500-க்கு கீழ் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அள்ளி தரும் BSNL.. ரூ.500 போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா..

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 228 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் யுசநயெ மொபைல் கேமிங் சேவை, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 239 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ரூ.10 டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் யுசநயெ மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40kbps ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 298 plan) ஆனது தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள். குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா நன்மை உள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 299 plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ் வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக குறைகிறது.

பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 347 plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டம் மொத்தமாக 108ஜிபி டேட்டாவை வழங்கும். தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை இந்த திட்டத்தில் உள்ளது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவையின் கூடுதல் நன்மையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 399 plan) தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

அள்ளி தரும் BSNL.. ரூ.500 போதும்.. தினமும் 3ஜிபி டேட்டா..

பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 485 plan) தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 123ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கின்றன.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 499 plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 75 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 150ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் போன்ற பல சிறப்பான நன்மைகள் இதில் உள்ளன. மேலும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40kbps ஆக குறையும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL offers unlimited calls and Plenty of Data prepaid plans under Rs 500: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X