Home
News

பிஎஸ்என்எல் புயலில் சிக்கியது ஜியோ: ரூ.249/- & ரூ.429/-க்கு அதிரடி அன்லிமிடெட் ஆபர்கள்.!

இந்திய டெலிகாம் தொழிற்துறைக்குள் மீண்டும் ஒரு உயர்நிலைப் போட்டி உண்டாகியுள்ளது.

By Muthuraj

ஏர்டெல் வாசிகளே, வெளிப்படையாக கூறவேண்டுமானால் ரிலையன்ஸ் ஜியோவிற்கு கடுமையான போட்டியை தருவது பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் தான், ஏர்டெல் நிறுவனம் அல்ல.

பிஎஸ்என்எல் புயலில் சிக்கியது ஜியோ: ரூ.249/- & ரூ.429/-க்கு அதிரடி.!

இந்திய டெலிகாம் தொழிற்துறைக்குள் மீண்டும் ஒரு உயர்நிலைப் போட்டி உண்டாகியுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோவிற்கு சரியான பதிலடி கொடுக்கும் வண்ணம் அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இரண்டு அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் புயலில் சிக்கியது ஜியோ: ரூ.249/- & ரூ.429/-க்கு அதிரடி.!

அந்த திட்டங்கள் என்ன.? அதன் விலை மற்றும் நன்மைகள் என்னென்ன.?

ரூ.249/- ரீசார்ஜ்

ரூ.249/- ரீசார்ஜ்

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இரண்டு புதிய திட்டங்களில் முதலில் இடம்பெறுவது குரல் மற்றும் தரவு நன்மைகளை உள்ளடக்கிய ரூ.249/- ரீசார்ஜ், நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி

இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி

நிறுவனத்தின் வலைத்தளத்தில் இந்த ரூ.249/-ரீசார்ஜ் பேக் ஆனது இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி (பிஎஸ்என்எல்-டூ-பிஎன்எல்) ஆகிய குரல் அழைப்பு நன்மைகளை உள்ளடக்கியுள்ளது என்று குறிப்பிடபட்டுள்ளது.

அக்டோபர் 25, 2017 வரை

அக்டோபர் 25, 2017 வரை

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.249/- எஸ்டிவி அல்லது சிறப்பு கட்டண வவுச்சர் ஆனது ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் கிடைக்கும் ஒரு சலுகையாகும். அதாவது, அக்டோபர் 25, 2017 வரை இந்த திட்டம் வாங்க கிடைக்கும் என்று நிறுவனத்தின் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் ரூ.429/-

ரீசார்ஜ் ரூ.429/-

மறுகையில், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக குரல் அழைப்பு மற்றும் தரவு நன்மைகள் கொண்ட மற்றொரு ரீசார்ஜ் பேக்கையும் அறிவித்துள்ளது. அந்த ரீசார்ஜ் ரூ.429/- என்ற விலைமதிப்பை பெற்றுள்ளது.

நாள் ஒன்றிற்கு ஒரு ஜிபி

நாள் ஒன்றிற்கு ஒரு ஜிபி

இந்த புதிய ரூ.429/- பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ஆனது, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் நாள் ஒன்றிற்கு ஒரு ஜிபி அளவிலான டேட்டாவை நிறுவனத்தின் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இந்த திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
Jio Effect: BSNL Offers Unlimited Calls, 28 GB Data At Rs. 249, 90 GB At Rs. 429. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X