Home
News

உங்கள் பணத்திற்கேற்ற மதிப்பு.. BSNL வழங்கும் இந்த 3 மாஸ் திட்டங்கள் பற்றி தெரியுமா?

அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் அதன் பயனர்களுக்காகப் பல பயனுள்ள ப்ரீபெய்ட் திட்டங்களை அற்புதமான நன்மைகளுடன் வழங்குகிறது. ஆனால், பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் BSNL இன் திட்டங்கள் நிழலாடுகிறது. இதற்குக் காரணம் நிறுவனம் இன்னும் அதன் சேவையை 4ஜி வேகத்தில் வழங்கவில்லை என்பது தான். இருப்பினும், BSNL அதன் வாடிக்கையாளர்களுக்கு சில அற்புதமான சேவைகளை வழங்கி வருகிறது.

BSNL வழங்கும் சிறந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள்

BSNL வழங்கும் சிறந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள்

BSNL என்பது இந்தியா முழுவதும் விரிவான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் மிகப்பெரிய மற்றும் முன்னணி பொதுத்துறை அலகுகளில் (PSUs) ஒன்றாகும். BSNL வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றிப் பார்க்கையில், இது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அற்புதமான டேட்டா பலன்களையும் வழங்குகிறது. BSNL வழங்கும் சிறந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன, அவை டேட்டா மற்றும் குரல் அழைப்புகளின் அடிப்படையில் உங்கள் பணத்திற்கு பெரும் மதிப்பை வழங்குகின்றன.

BSNL வழங்கும் STV_429 ப்ரீபெய்ட் திட்டம்

BSNL வழங்கும் STV_429 ப்ரீபெய்ட் திட்டம்

பட்டியலில் உள்ள முதல் ப்ரீபெய்ட் திட்டம் என்றால், அது BSNL வழங்கும் STV_429 திட்டம் தான். இது OTT இயங்குதளத்திற்கான அணுகலுடன் வருகிறது. இந்த திட்டம் 81 காலண்டர் நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. வெறும் ரூ. 429 இல் வரம்பற்ற குரல் அழைப்பை இந்த திட்டம் வழங்குகிறது. மேலும், பயனர்கள் ஒரு நாளைக்கு 1 ஜிபி மற்றும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டத்துடன் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பு நிறைவடைந்ததும் 40 கேபிபிஎஸ் என நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் இணையச் சேவையைப் பெறுகிறார்கள்.

இந்த திட்டத்தை எங்கிருந்து ரீசார்ஜ் செய்யலாம்?

இந்த திட்டத்தை எங்கிருந்து ரீசார்ஜ் செய்யலாம்?

இத்துடன் பயனர்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலும் கிடைக்கிறது. இந்த ரூ. 429 விலை திட்டத்துடன் அதன் பயனர்களுக்குத் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. BSNL இணையதளம் மற்றும் BSNL selfcare ஆப்ஸ் மூலம் இந்த திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம். குறிப்பாக நிறுவனத்தின் 'வாய்ஸ் வவுச்சர்' பிரிவின் கீழ் இந்த திட்டத்தை நீங்கள் வாங்கலாம்.

BSNL வழங்கும் STV_447 திட்டத்தின் நன்மைகள்

BSNL வழங்கும் STV_447 திட்டத்தின் நன்மைகள்

பட்டியலில் அடுத்தது டெல்கோ வழங்குவது டேட்டா சார்ந்த ப்ரீபெய்ட் திட்டமாகும். இந்த திட்டம் ரூ. 447 விலையில் வருகிறது. இந்த ரூ. 447 விலை கொண்ட திட்டம் உங்களுக்கு மொத்தமாக 100 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. BSNL இந்த திட்டத்துடன் வழங்கும் நிர்ணயிக்கப்பட்ட 100 ஜிபி டேட்டாவைத் தாண்டிய பின்னர், பயனர்களுக்கான இணைய வேகம் 80 கேபிபிஎஸ் வேகமாக குறைக்கப்பட்டு இணையத்தை அணுக அனுமதிக்கும். இந்தத் திட்டம் 60 காலண்டர் நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவை இலவசமா?

BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவை இலவசமா?

BSNL இணையதளம் மற்றும் BSNL selfcare ஆப்ஸ் மூலம் இந்த திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம். குறிப்பாக நிறுவனத்தின் 'வாய்ஸ் வவுச்சர்' பிரிவின் கீழ் இந்த திட்டத்தை நீங்கள் வாங்கலாம். இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. இத்துடன் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும் இந்த திட்டத்துடன் நீங்கள் பெறுவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL வழங்கும் STV_WFH_599 திட்டம்

BSNL வழங்கும் STV_WFH_599 திட்டம்

அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வழங்கும் நீண்ட கால மற்றும் அதிக டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் பட்டியலில் கடைசியாக உள்ளது STV_WFH_599 திட்டமாகும். இந்த BSNL STV_WFH_599 என்ற ப்ரீபெய்ட் திட்டம் ரூ. 599 விலையில் வருகிறது. இத்திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஒரு செட் டேட்டா வரம்பை பயன்படுத்தினால், பயனர்கள் 80 Kbps வேகத்தில் இணையத்தை அனுபவிக்க முடியும். மேலும், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 84 நாட்கள் ஆகும்.

Zing ஸ்ட்ரீமிங் தளத்திற்கான சந்தா இலவசம்

Zing ஸ்ட்ரீமிங் தளத்திற்கான சந்தா இலவசம்

மும்பை மற்றும் டெல்லியில் ரோமிங் செய்வது உட்பட ஹோம் எல்எஸ்ஏ மற்றும் தேசிய ரோமிங்கில் பயனர்கள் உண்மையிலேயே வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டம் Zing ஸ்ட்ரீமிங் தளத்திற்கான சந்தாவையும் வழங்குகிறது. இது பயனர்களுக்கு ஆயிரக்கணக்கான பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை அணுக அனுமதிக்கிறது. இந்தத் திட்டத்தில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், பயனர்கள் 00:00 மணி முதல் 05:00 மணிநேரம் வரை வரம்பற்ற இலவச இரவுத் தரவைப் பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Offers Three Great Value For Money Prepaid Plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X