BSNL பயனர்கள் மிஸ் பண்ணக் கூடாத 2 அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள்.! எக்கச்சக்க சலுகைகள்.!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட மலிவு விலையில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி சேவையை விரைவில் நாடு முழுவதும் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அனைத்து நகரங்களிலும் மற்றும் கிராமங்களிலும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் எக்கச்சக்கமான சலுகைகளை வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். இப்போது அந்த திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெயட் திட்டம்: பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த அசத்தலான திட்டம்.
அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெயட் திட்டத்தில் BSNL ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட பல பயன்பாட்டு நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்: பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை 40கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கும் இந்த திட்டம்.

மேலும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஸிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் (GameOn) போன்ற சேவைகளையும் இலவசமாக வழங்குகிறது. குறிப்பாக ரூ.769 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக டேட்டாவுடன் கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சமீபத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரைவில் தொடங்கப்படும் என்று திருநெல்வேலி பிஎஸ்என்எல் பொது மேலாளர் பிஜி பிரதாப் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் என்னவென்றால், மத்திய அரசின் ஆத்ம நிர்பார் பாரத் முயற்சியின்கீழ், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தில், 4ஜி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 222 கைப்பேசி கோபுரங்களும் 10 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையுடன் மேம்படுத்தப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படுகிறது. எனவே இதனால் அனைத்து கைப்பேசி கோபுரங்களும் 4ஜி திறன் கொண்டதாக இருக்கும். பின்பு மென்பொருள் மேம்படுத்தல் மூலம் 5ஜி-க்கு மாற்றுவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மேலும் கூடுதலாக 24 புதிய 4ஜி கைப்பேசி கோபுரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் நெட்வொர்க் மேம்படுத்தல் மற்றும் விரிவாக்கப் பணிகள் முடிந்ததும் பிஎஸ்என்எல் கைப்பேசி வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவமும், சேவையின் தரமும் சிறப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பிஎஸ்என்எல் பயனர்கள் 4ஜி சேவைகளைப் பெறுவதற்கு தங்களின் பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள், கிளை அலுவலகங்கள், மேளா நடைபெறும் இடங்களில் இலவசமாக 4ஜி சிம் கார்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications