யாரும் இப்படி ஒரு சலுகை கொடுக்க மாட்டாங்க.. 395 நாள் வேலிடிட்டி.. தினமும் 3GB டேட்டா.. அசரவைக்கும் BSNL..
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதுவும் சமீபத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 11 முதல் 25 சதவீதம் வரை ப்ரீபெய்ட் கட்டணங்களை அதிகரித்தது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போதும் கூட மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் சில முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக நன்மையை வழங்குகிறது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2999 plan) தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 1095ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல அசத்தலான சலுகைகள் இதில் கிடைக்கின்றன.
அதன்படி பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 790ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் ஹார்டி கேம்ஸ் (Hardy Games), அரினா கேம்ஸ் (Arena Games), கேம் ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell), கேமியம் (Gameium), லிஸ்டன் பாட்காஸ்ட் (Lystn Podocast), ஜிங்க் மியூசிக் (Zing Music) மற்றும் வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) போன்ற பல சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL rs 997 plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 160 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 320ஜிபி டேட்டா கிடைக்கிறது.
தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், சேலஞ்சர் அரினா கேம்ஸ் (Challenger Arena Games), லிஸ்டன் போட்காஸ்ட் (Lystn Podcast), வாவ் என்டர்டெயின்மென்ட் (WOW Entertainment), ஜிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes) உள்ளிட்ட பல நன்மைகள் பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தில் இருக்கிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL rs 666 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 249 plan) தினமும் 2ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 45 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் 4ஜி சேவையை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது சில முக்கிய இடங்களில் இந்நிறுவனம் 4ஜி (4G) சேவையை வழங்கி உள்ளது. அதேபோல் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி (5G) சேவையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








