Home
News

சலுகைகளை அள்ளித் தரும் 4 டேட்டா வவுச்சர்கள்: அதிரடி காட்டும் BSNL நிறுவனம்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் மாதங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டிக் கொடுக்கு வகையில் அசத்தலான டேட்டா வவுச்சகளை வைத்துள்ளது இந்நிறுவனம்.

அதாவது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் கூட டேட்டா வவுச்சர்களில் அவ்வளவு சிறப்பான சலுகைகளை வழங்குவதில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் டேட்டா வவுச்சர்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேசமயம் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டேட்டா வவுச்சர்கள். இப்போது பிஎஸ்என்எல் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் அசத்தலான 4 ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர்களைப் பார்ப்போம்.

சலுகைகளை அள்ளித் தரும் 4 BSNL டேட்டா வவுச்சர்கள்.!

பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.485 திட்டம் ஆனது ஒரு அன்லிமிடெட் காம்போ பிளான் ஆகும். இந்த திட்டம் 1.5ஜிபி அளவிலான தினசரி டேட்டா, எந்த எஃப்யூபி வரம்பும் இல்லாமல் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் போன்ற சிறந்த சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டம் ஓடிடி-நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. Zing செயலி மற்றும் Eros Nowக்கான சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

சலுகைகளை அள்ளித் தரும் 4 BSNL டேட்டா வவுச்சர்கள்.!

பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. இதுதவிர தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ 769 திட்டம்
BSNL ரூ 769 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட், லிஸ்ட்ன் பாட்காஸ்ட் சர்வீசஸ், ஹார்டி மொபைல் கேம் சேவை, லோக்துன் மற்றும் ஜிங் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த பிஎஸ்என்எல் ரூ 769 திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ 439 திட்டம்
டேட்டா வேண்டாம் வெறும் அழைப்பு நன்மைகள் மட்டும் போதும் என்று நினைக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ 439 திட்டத்தை தேர்வு செய்யலாம். அதாவது பிஎஸ்என்எல் ரூ 499 திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் மொத்தமாக 300 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் டேட்டா நன்மைகளை வழங்காது.

சலுகைகளை அள்ளித் தரும் 4 BSNL டேட்டா வவுச்சர்கள்.!

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. பின்பு அடுத்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை கூட இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதற்கான வேலைகளில் பிஎஸ்என்எல் முழுமையாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் சில நகரங்களில் மட்டுமே வழங்கிவருகிறது. கூடிய விரைவில் அனைத்து நகரங்களிலும் இந்நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Offers Most Benefits on 5 Medium Term Voice and Data Vouchers: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X