Home
News

குறைந்த விலையில் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனம்.!

வருகிற 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 4ஜி சேவையை முழு வீச்சில் அறிகம் செய்ய உள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்ல 4ஜி சேவையை அறிமுகம் செய்தால் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல்

அதேபோல் சமீபத்தில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தொடர்நது குறைந்த விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

 பிஎஸ்என்எல் ரூ.75 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.75 திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.75 திட்டம் ஆனது 100 நிமிடங்களுக்கான வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் ரூ.75 திட்டத்தில் 50 நாட்கள் வேலிடிட்டி உடன் இலவச ரிங்டோன்களும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் 75 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் 60 நாட்களுக்கு இலவச காலர் ட்யூன் சேவையை பெறமுடியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இது டெய்லி லிமிட் எதுவும் இல்லாமல் வருகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் 75 நாட்களில் எப்போது வேண்டுமானதும் இந்த டேட்டாவை பயன்படுத்த முடியும். இதுதவிர பிஎஸ்என்எல் ரூ.94 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100 நிமிட வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த 100 நிமிடங்களை பிஎஸ்என்எல் நெட்வொர்க் மற்றும் நாட்டில் உள்ள வேறு ஏதேனும் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் ஒருவருடன் பேசும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். பின்பு இது காலாவதியான பிறகு வாடிக்கையாளர்கள் நிமிடத்திற்கு 30 பைசா என்கிற கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மயை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்கு தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டத்தின் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள்இந்த திட்டத்தில் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் 60 நாட்கள் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். எனவே இந்த திட்டத்தில்
அதிக டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில்

இதுதவிர ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளன. அதேபோல் இலவச BSNL ட்யூன்கள் மற்றும் ஓவர்-தி-டாப் (OTT) தளமான Eros Nowக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 600 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL offers low cost prepaid plans: See Full List here: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X