Home
News

ஒரு வருடம் முழுவதும் தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் டேட்டா ரீசார்ஜ் திட்டம்!

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இது தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.1498 ஆக இருக்கிறது. இந்த திட்டமானது இந்தியா முழுவதும் கிடைக்கிறது. இது 365 நாட்கள் வரம்போடு வருகிறது.

சிறந்த அம்சங்களோடு ரீசார்ஜ் திட்டங்கள்

சிறந்த அம்சங்களோடு ரீசார்ஜ் திட்டங்கள்

பிஎஸ்எனஎல் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விலையில் சிறந்த அம்சங்களோடு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது நீண்ட கால செல்லுபடியாகும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது. டேட்டா நன்மைகளுடன் இந்தியாவில் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

365 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்கள்

365 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்கள்

இந்தியா முழுவதும் கிடைக்கும் இந்த திட்டமானது மொத்தம் 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டமானது ரூ.1498 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு கிடைக்கும் முழுமையான நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.1498 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1498 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.1498 புதிய டேட்டா எஸ்டிவி திட்டமானது அதிவேக தினசரி தரவை வழங்குகிறது. இந்த திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் செல்லபடியாகும் 365 நாட்களுக்கும் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா வரம்பு முடிந்ததும் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். இந்த திட்டமானது தற்போது அசாம், குஜராத், உபி கிழக்கு மற்றும் உபி மேற்கு, கொல்கத்தா, தெலுங்கான மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான பல வட்டங்களில் கிடைக்கிறது.

நீண்ட காலத்திற்கு டேட்டா

நீண்ட காலத்திற்கு டேட்டா

தொடர்ந்து ரீசார்ஜ் செய்யாமல் நீண்ட காலத்திற்கு டேட்டாவை பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டம் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் டேட்டா பேக் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கதாகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள், ரூ.1498 திட்டத்தை பிஎஸ்என்எல் வலை போர்டல் அல்லது சுய பாதுகாப்பு வாடிக்கையாளர் சேவை மூலம் நேரடியாக பெறலாம்.

பிஎஸ்என்எல் ரூ.18 ப்ரீபெய்ட திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.18 ப்ரீபெய்ட திட்டம்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.18 ப்ரீபெய்ட திட்டம் ஆனது 48 மணி வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. குறிப்பாக வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற வீடியோ அழைப்பு வசதியை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 1ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ஏர்டெல் நிறுவனமும் ஒரு திட்டம் வைத்துள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.201 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.201 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.201 திட்டம் 90 நாட்கள் செல்லுபடியாகும். இந்த செல்லுபடியாகும் காலத்திற்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் 300 நிமிட அழைப்பு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் முழு செல்லுபடியாகும் காலத்திற்கு 6 ஜிபி டேட்டா
மற்றும் 99 இலவச எஸ்எம்எஸ் வசதிகளை வழங்குகிறது. அழைப்பு மற்றும் தரவை சிக்கனமாக பயன்படுத்தும் நபர்களுக்கு இது சிறந்த திட்டமாகும்.

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரூ.139 திட்டம்

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரூ.139 திட்டம்

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரூ.139 திட்டம் டெல்லி மற்றும் மும்பை உட்பட அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் 2 ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள். இது 80 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனர்கள் தினசரி 100 எஸ்எம்எஸ்களை பெறுவார்கள். மாதாந்திர திட்டம் தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்குஇது சிறந்த திட்டமாகும்.

Best Mobiles in India

English summary
BSNL offers its data prepaid plan with 2GB of data per day for Rs.1498
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X