அதிக டேட்டா நன்மைகளை தரும் அசத்தலான பிஎஸ்என்எல் திட்டங்கள்.!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் பல்வேறு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பல திட்டங்களில் அருமையான சலுகைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து திட்டங்களும் பயன்படும் வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இந்நிறுவனம் விரைவில் அனைத்து இடங்களிலும் 4ஜி சேவையை கொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும் என மக்களின் எதிர்பார்ப்பு. மேலும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சோதனையை துவங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்இப்போது அதிக டேட்டா நன்மைகளை தரும் அசத்தலான பிஎஸ்என்எல் திட்டங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

அதாவது telecomtalk வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187, ரூ.499 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக டேட்டா நன்மைகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களை தேர்வு செய்வது நல்லது. மேலும் இந்த திட்டங்களின் நன்மைகளை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நுகர்வுக்குப் பிறகு, இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.499 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஸ்டிவி 499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்துடன் ஜிங் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களின் கூடுதல் நன்மைகளையும் பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் STV_WFH_599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நுகர்வுக்குப் பிறகு, இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஜிங்கின் கூடுதல் நன்மைகள் உள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தினசரி டேட்டா வரம்பு முடிந்ததும் இணைய வேகம் 40 கேபிபிஎஸ் வேகமாக குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டமானது
தற்போது அசாம், குஜராத், உபி கிழக்கு மற்றும் உபி மேற்கு, கொல்கத்தா,தெலுங்கான மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான பல வட்டங்களில் கிடைக்கிறது. அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பும் மக்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. ஆனால் இந்த திட்டம் குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது டேட்டா நன்மையை மட்டுமே வழங்கும் இந்த அசத்தலான திட்டம். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications