அதிக டேட்டா நன்மையை வழங்கும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி-399 திட்டம்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-399 என்று அழைக்கப்படும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். இதுதவிர பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் லோக்துன் உள்ளடக்கத்திற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 80நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 திட்டம்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-429 என்று அழைக்கப்படும் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். இதுதவிர Eros Now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 81 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 100ஜிபி அதிவேக டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 100ஜிபி டேட்டாவைத் தாண்டி, பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தை அணுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். மேலும் இது இணையதளத்தில் 'டேட்டா வவுச்சரின்' கீழ் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது ஒரு நாளைக்கு 100 SMS உடன் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்குகிறது. அதேபோல் இந்த ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டத்தில் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகளுக்கான சந்தாவையும் பெறலாம்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டம்
பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 என்று அழைக்கப்படும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் எந்த OTT சந்தாவையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் ரூ.599 திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.குறிப்பாக இந்த திட்டத்தில் பிஎஸ்என்எல் சந்தாதாரர்களுக்கு இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் நன்மை மற்றும் ஜிங் மியூசிக் அப்ளிகேஷனின் இலவச சந்தாவும் கிடைக்கிறது. மேற்கூறிய நன்மைகளுடன், BSNL நிறுவனம் இந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு தினமும் இரவில் வரம்பற்ற டேட்டா நன்மையையும் கூடுதலாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications