ஜியோ பிராட்பேண்ட் தாக்கம்: மீண்டும் ஒரு புதிய சலுகையை வழங்கியது பிஎஸ்என்எல்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, மேலும் ஜியோ பிராட்பேண்ட் அறிவிப்புக்கு பிறகு பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிமுகம் செய்துவிட்டது இந்நிறுவனம்.

அமேசான் பிரைம்
மீண்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது, அது என்னவென்றால், அமேசான் பிரைம் உறுப்பினராக ஒரு பெரிய சலுகையை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

ரூபாய் 399 செலுத்தி...
அதன்படி ரூபாய் 399 செலுத்தி பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்கள் தற்போது அமேசான் பிரைம் சேவையினை பெற இயலும் என தெரிவித்துள்ளது. இது பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவிக்கையில் தற்போது உள்ள வாடிக்கையாளர்களும் மற்றும் புதிய வாடிக்கையாளர்களும் இந்த சலுகையினை பெற இயலும் என தெரிவித்துள்ளனர்.

அனைத்து பிராட்பேண்ட் பயனர்களும் பெறுவார்கள் எ
குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டத்தின் ஆரம்ப விலை ரூ.399 ஆகும் என்பதால், நிறுவனத்தின் அனைத்து பிராட்பேண்ட் பயனர்களும் இந்த வசதியைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பிராந்திய திரைப்படங்கள்
மேலும் இந்த திட்டத்தின் மூலம் அமேசான் பிரைம் உறுப்பினரின் கீழ், பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்கள் அமேசான் பிரைம் வீடியோக்களை பார்க்க முடியும், பின்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அதிரடியான ஹாலிவுட்,
பாலிவுட் மற்றும் இந்திய பிராந்திய திரைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழலாம்.

25 சதவிகித கேஷ்பேக்
அமேசான் பிரைம் உரிமையுடன், பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 வரை பிராட்பேண்ட் திட்டங்களில் 15சதவிகித கேஷ்பேக், ரூ.499 முதல் ரூ.900வரையிலான திட்டங்களுக்கு 20சதவிகிதம் கேஷ்பேக் மற்றும் ரூ.999 அல்லது அதற்கு மேற்பபட்ட பிராட்பேண்ட் திட்டங்களுக்கு 25 சதவிகித கேஷ்பேக் சலுகைகளையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ஜிகா பைபர்
இந்திய சந்தைக்கு ஜியோ ஜிகா பைபர் வருகையால், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ஏராளமான திட்டங்களையும் அறிவித்து வருகின்றது. இதில் தற்போது, ஜியோ ஜிகா பைபருக்கு போட்டியாக பல்வேறு வகையான அதிர திட்டங்களையும் பிஎஸ்என்எல் கைவசம் வைத்துள்ளது .


Click it and Unblock the Notifications