BSNL தடாலடி! 5 மாவட்ட கஸ்டமர்களுக்கு இலவச 4G சிம்.. எந்தெந்த மாவட்டம்?
தமிழ்நாடு முழுவதும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அடுத்த சில வாரங்களில் 4ஜி சேவையை வழங்கவுள்ள நிலையில், அதற்கான 4ஜி சிம் கார்டுகளை (4G SIM Cards) இலவசமாக வழங்கும் பணியை தொடங்கிவிட்டது. இப்போது, நான்கு மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரம் இதோ.
இந்தியாவில் ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கியதில் இருந்து, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு எப்போது 4ஜி சேவை (BSNL 4G Service) வழங்கப்படும் என்று காத்திருக்க தொடங்கினர். இந்த காத்திருப்பு 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து, அவர்களை துவண்டு போக செய்துவிட்டது என்பதே உண்மையாகும்.

இதனால், லட்சக்கணக்கான பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் வேறு டெலிகாம் (Telecom) நிறுவனங்களுக்கு மாறத்தொடங்கினர். இந்த சூழலிலேயே மத்திய அரசு, பிஎஸ்என்எல் நிறுவனம் மூலம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை வழங்க ரூ. 89,047 கோடியை ஒதுக்கி, அதற்காக பணியை விறுவிறுப்பாக செய்து வருகிறது. தமிழ்நாட்டின் ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 4ஜி சேவைக்காக டவர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பழைய டவர்களை 4ஜி டவர்களாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. அதோடு புதிதாக 28 டவர்களை அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்ட அந்தந்த மாவட்ட பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.
இவர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக இலவசமாக பிஎஸ்என்எல் 4ஜி சிம் கார்டுகள் (Free BSNL 4G SIM Card) வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் 2ஜி மற்றும் 3ஜி சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்கள் அனைவரும் அருகில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள், பிரான்சைசி அலுவலகங்களில் 4ஜி சிம் கார்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
இதுமட்டுமல்லாம், சிம் கார்டு மேளா நடக்கும் இடங்களிலும் இலவசமாக 4ஜி சிம் கார்டுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஆகவே, பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் விரைவில் 4ஜி சிம் கார்டுகளை வங்கிக்கொள்வது நல்லது.
முன்னதாக மத்திய அரசு, ரூ. 46,338 கோடிக்கு 700 MHz அலைவரிசையும், ரூ. 26,184 கோடிக்கு 3300 MHz அலைவரிசையும், ரூ. 6,564 கோடிக்கு 26 GHz அலைவரிசையும், ரூ. 9,428 கோடிக்கு 2500 MHz அலைவரிசையும் ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








