குறைந்த விலையில் நச்சுனு 4 திட்டங்கள்.. 84 நாள் வேலிடிட்டி.. டேட்டா+ பலன்களை கொட்டிக் கொடுக்கும் BSNL.!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் கூடிய விரைவில் 4ஜி (4G) சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்நிறுவனம் 4ஜி சேவையை நாட்டில் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் முக்கிய இடங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். எனவே தற்போது அதிக மக்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.
குறிப்பாக ஜியோ நிறுவனத்தை விட குறைந்த விலையில் அதிக பலன்களைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்நிறுவனம் குறைந்த விலையில் அதிக நன்மையைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் திட்டம். மேலும் ஜிங்க் (Zing) பிஆர்பிடி (PRBT) மற்றும் ஆஸ்ட்ரோடெல் (Astrotell), வாவ் என்டேர்டைன்மெண்ட் (WOW Entertainment) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் ரூ.599 திட்டம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 485 plan) தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 82 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 123ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்.
அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.
பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 347 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
அதாவது பிஎஸ்என்எல் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. மேலும் M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL RS 299 plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.குறிப்பாக தினமும் 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications