Home
News

சத்தமின்றி ரூ.699-ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை வழங்கிய பிஎஸ்என்எல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ,ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை வைத்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் 4ஜி சேவையை அனைத்து இடங்களுக்கும் வழங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.

 டெலிகாம் நிறுவனங்கள் இப்போது

மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இப்போது 5ஜி-ஐ சோதனை செய்து வருகின்றன. எனவே விரைவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ699-ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது.

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம்

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி, தனது ரூ.699-ப்ரீபெய்ட் திட்டத்திற்கான விளம்பர சலுகையை அறிவித்தது.பின்பு இந்த விளம்பர சலுகையின் கீழ் இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை 160 நாட்களில் இருந்து 180 நாட்களாக அதிகரித்துள்ளது. அதாவது சுருக்கமாக கூறவேண்டும் என்றால் நீங்கள் இப்போது ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 160 நாட்களுக்கு பதிலாக 180 நாட்களுக்கு செல்லுபடியை பெறமுடியும். சத்தமில்லாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.699 திட்டதில் வேலிடிட்டி-ஐ அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 500 எம்பி டேட்டா நன்மையை வழங்கும். பின்புஇந்தியாவுக்குள் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற இலவச அழைப்புகளை வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிரதினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டம் முதல் 60 நாட்களுக்கு இலவச கஸ்டமைஸ்டு ரிங்பேக் டோன் (பிஆர்பிடி) நன்மையுடனும் அனுப்பப்படும் என அந்நிறவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த மாதம் இந்நிறுவனம் ரூ.499 மற்றும் ரூ.198 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் சலுகையை வழங்கியது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

 பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 45 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே வழங்கியது, ஆனால் தற்போது 50 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தினசரி 2ஜிபி டேட்டா, இலவச அழைப்பு நன்மைகள் இந்த ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கு பதிலாக இலவச லோக்தூன் உள்ளடக்கத்துடன் வருகிறதுஇந்த திட்டம்.

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது முன்பு 1ஜிபி டேட்டா நன்மையை மட்டுமே வழங்கியது, ஆனால் தற்சமயம் இந்த திட்டததில் 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 180ஜிபி டேட்டா நன்மையை பெற முடியும். இதுதவிர இலவச பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சந்தா மற்றும் ஜிங் மியூசிக் பயன்பாட்டு சந்தாவை
இந்த திட்டத்தில் பெறமுடியும். மேலும் இலவச வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL offers extra benefits on Rs 699-prepaid plan: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X