ஏரி உடைந்தா மீன் ஏரியாக்கு வந்துதான ஆகனும்: குறைந்த விலை நிறைந்த சேவை- ரூ.300-க்கு கீழ் பிஎஸ்என்எல் திட்டங்கள்

|

பிஎஸ்என்எல் வழங்கும் எஸ்டிவி-49 திட்டம் ஆனது 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த மலிவான திட்டம் ஆனது 100 நிமிட அழைப்புகளை வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தாண்டி அழைப்புகளை மேற்கொள்ளும் போது நிமிடத்திற்கு 45 பைசா வசூலிக்கப்படுகிறது.

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)

அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்த பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனமானது தொடர்ந்து விலை உயர்வை அறிவித்து வருகிறது. அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் குறைந்த விலையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதேபோல் நிறுவனம் அதிக விலை திட்டங்களை பல்வேறு சலுகைகளோடு வழங்குகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.300-க்கு குறைவான திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.300-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள்

ரூ.300-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள்

ரூ.300-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கையில், பிஎஸ்என்எல் எஸ்டிவி 49 திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த மலிவான திட்டமானது 100 நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது. நிர்ணயிக்கப்பட்ட வரம்பை தாண்டு போது நிமிடத்திற்கு 45 பைசா வசூலிக்கப்படுகிறது. பயனர்கள் 100 நிமிட அழைப்புகளுடன் 2ஜிபி டேட்டாவை வெறும் ரூ.49-க்கு வழங்குகிறது.

கவர்ச்சிகரமான திட்டம்

கவர்ச்சிகரமான திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் இரண்டாவது கவர்ச்சிகரமான திட்டம் ஆனது எஸ்டிவி-118 ஆகும். இந்த திட்டம் ரூ.118 விலையில் கிடைக்கிறது. இது 26 நாட்கள் செல்லுபடியாகும். இது வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. பேக் ஒவ்வொரு நாளும் 500 டேட்டாவை வழங்குகிறது. தினசரி டேட்டா வரம்பு முடிந்த உடன் இதன் வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

குரல் அழைப்பு சலுகை மற்றும் டேட்டா நன்மைகள்

குரல் அழைப்பு சலுகை மற்றும் டேட்டா நன்மைகள்

பிஎஸ்என்எல் வழங்கும் அடுத்த திட்டம் வாய்ஸ்-135 திட்டமாகும். இந்த திட்டமானது குரல் அழைப்பு சலுகை மற்றும் டேட்டா நன்மைகளை வழங்குகிறது. ரூ.135 விலையில் வழங்கும் இந்த திட்டமானது பயனர்களுக்கு 1440 நிமிட ஆன் நெட் மற்றும் ஆஃப் நெட் அழைப்பு அணுகலை வழங்குகிறது.

எஸ்டிவி 147 திட்டம்

எஸ்டிவி 147 திட்டம்

பிஎஸ்என்எல்-ன் அடுத்த திட்டம் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. இந்த திட்டம் எஸ்டிவி 147 என அழைக்கப்படுகிறது. எஸ்டிவி 147 திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும். பயனர்கள் வரம்பற்ற அழைப்பு அம்சத்தை வழங்குகிறது. கூடுதலாக இந்த திட்டம் 10 ஜிபி மொத்த டேட்டா மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கான இலவச அமுகலை ரூ.147 விலையில் வழங்குகிறது.

வரம்பற்ற அழைப்பு நன்மைகள்

வரம்பற்ற அழைப்பு நன்மைகள்

இந்த பட்டியலில் இருக்கும் அடுத்த திட்டத்தின் விலை ரூ.247 என்ற விலையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பல நன்மைகள் வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் எஸ்டிவி-247 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு விருப்பங்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை தினசரி வழங்குகிறது. பயனர்களுக்கு மொத்தம் 50 ஜிபி அதிகபட்ச டேட்டாவை வழங்குகிறது. வேக தரவு திட்டம் நிறைவடைந்த உடன் பயனர்கள் 80 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பெறுகிறார்கள். இந்த திட்டம் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கான அணுகலையும் ஈராஸ் நவ் சந்தாவையும் வழங்குகிறது.

ரூ.300-க்கு கீழ் கிடைக்கும் விலை உயர்ந்த திட்டம்

ரூ.300-க்கு கீழ் கிடைக்கும் விலை உயர்ந்த திட்டம்

ரூ.300-க்கு கீழ் கிடைக்கும் விலை உயர்ந்த திட்டமாக எஸ்டிவி-298 திட்டம் இருக்கிறது. இந்த திட்டமானது 56 நாட்கள் செல்லுபடியாகும். ரூ.298 பிஎஸ்என்எல் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. பயனர்கள் ஒவ்வொரு நாளும் 1ஜிபி டேட்டாவையும் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா நிறைவடைந்த உடன் 40 கேபிபிஎஸ் வேகத்திலும் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. பயனர் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ்களுக்கான அணுகலை பெறுவார்கள் அதோடு ஈராஸ் நவ் தளத்திற்கான 56 நாட்கள் சந்தாவை பெறுவார்கள்.

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வு

விஐ ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வானது நவம்பர் 25 முதல் அமலுக்கு வர இருக்கிறது. ஏர்டெல் விலை உயர்வை அறிவித்ததையடுத்து விஐ விலை உயர்வை அறிவித்துள்ளது. தற்போடு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ரீசார்ஜ் செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். விஐ அறிவித்த கட்டண உயர்வு நவம்பர் 25 ஆம் தேதி முதலே அமலுக்கு வருகிறது என்பதால், பயனர்கள் இந்த இரண்டு தினங்களிலேயே ரீசார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் அமல்படுத்திய விலை உயர்வு

ஏர்டெல் அமல்படுத்திய விலை உயர்வு

ஏர்டெல் அமல்படுத்திய விலை உயர்வைத் தொடர்ந்து விஐ (வோடபோன் ஐடியா) நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் பல ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பயனரின் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த புதிய கட்டண உயர்வானது நவம்பர் 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. வரம்பற்ற குரல் அழைப்பு உள்ளிட்ட பல ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரித்திருக்கிறது. தொடர்ந்து தற்போது ஜியோ நிறுவனமும் விலை உயர்வை அறிவித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து விலை உயர்வை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் முழுமையான 4ஜி சேவை வழங்கும் நோக்கில் முன்னோக்கி அடியெடுத்து வைப்பதோடு தொடர்ந்து பயனர்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஓடிடி சலுகை

ஓடிடி சலுகை

ஈராஸ் நவ் தனது அறிவிப்பில் பிஎஸ்என்எல்-ன் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதன் ப்ரீமியம் உள்ளடக்கத்தை வழங்க இருப்பதாக உறுதி செய்திருக்கிறது. பிஎஸ்என்எல் ஆனது ஈராஸ் நவ் ப்ளஸ் மெம்பர்ஷிப்பை அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்களின் சில பயனர்களுக்கு எஸ்டிவி செயலில் இருக்கும் வரை மட்டும் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Offers Best Prepaid Plans Under Rs.300: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X