Home
News

ரூ.300-க்கு கீழ் இவ்வளவு திட்டங்கள், இவ்வளவு நன்மைகளா?- பிஎஸ்என்எல் தான் மாஸ்!

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. தனியார் நிறுவனங்களை சமாளிக்க அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனம் அதற்கு இணையான திட்டங்களை அறிவித்து வருகிறது. ஜியோ நிறுவனம் அறிமுகம் ஆன குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழத் தொடங்கியது. தற்போது அதே வியூகத்தை பிஎஸ்என்எல் அமைத்து வருகிறது. பிஎஸ்என்எல் அனைத்து வகையான பயனர்களையும் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை வழங்குகி வருகிறது.

பிஎஸ்என்எல் சிறந்த ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் சிறந்த ரீசார்ஜ் திட்டம்

ரீசார்ஜ் செய்வதில் அதிக செலவு செய்ய முடியாத நிலை பலரிடமும் இருக்கத் தான் செய்கிறது. பிஎஸ்என்எல் அத்தகையவர்களைக் கருத்தில் கொண்டு திட்டங்கள் வழங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களின் கடும் போட்டியை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் இந்த திட்டங்களை பிரதானமாக பயன்படுத்தி வருகிறது. பிஎஸ்என்எல் ரூ.300க்கும் குறைவான சிறந்த திட்டங்களை வழங்குகிறது. இதில் கவர்ச்சிகரமான டேட்டா, குரலழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. இந்த திட்டங்களை விரிவாகப் பார்க்கலாம்.

ரூ.300-க்கும் குறைவான பிஎஸ்என்எல் திட்டம்

ரூ.300-க்கும் குறைவான பிஎஸ்என்எல் திட்டம்

ரூ.300-க்கும் குறைவான பிஎஸ்என்எல் திட்டங்கள் குறித்து பார்க்கையில் முதல் இரண்டு மலிவான திட்டங்களாக ரூ.49 மற்றும் ரூ.99 இருக்கிறது. எஸ்டிவி-49 எனப்படும் முதல் திட்டமானது 24 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்தக் காலத்திற்கு மொத்தம் 2ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட இலவச குரல் அழைப்பு பலன்களைப் வழங்குகிறது. அதேபோல் எஸ்டிவி_99 பேக் 22 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் முழுவதும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. அழைப்புகளைச் செய்வதற்கு மட்டுமே இணைப்பைப் பயன்படுத்துபவர்கள் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

மற்றொரு பிரபலமான திட்டம்

மற்றொரு பிரபலமான திட்டம்

பிஎஸ்என்எல் வழங்கும் மற்றொரு பிரபலமான திட்டம் ரூ.135 திட்டமாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இந்த செல்லுபடியாகும் காலத்திற்கு மொத்தம் 1440 நிமிட குரல் அழைப்பு பலன்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் பெயர் வாய்ஸ்_135. டேட்டா ஆஃபர் பேக்குகள் ஆகும். பிஎஸ்என்எல் எஸ்டிவி_118 என்ற திட்டம் பயனர்களிடம் பிரபலமாக இருக்கிறது. இந்த திட்டம் ரூ.118-க்கு 26 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்திற்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

வரம்பற்ற குரல் அழைப்பு சலுகைகள்

வரம்பற்ற குரல் அழைப்பு சலுகைகள்

பிஎஸ்என்எல்-ன் அடுத்த குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டம் ஆனது எஸ்டிவி_147 பேக் ஆகும். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் முழுவதும் 10ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் கூடுதல் நன்மையாக பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. அடுத்த பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.185 ஆகும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் எஸ்டிவி_185 என அழைக்கப்படுகிறது.

ரூ.187 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.187 விலையில் கிடைக்கும் திட்டம்

பிஎஸ்என்எல் மற்றொரு திட்டம் ரூ.187 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு பலன்களைப் பெறுவீர்கள். பிஎஸ்என்எல் இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அடுத்த இரண்டு மலிவான திட்டங்கள் ஓடிடி நன்மைகளை வழங்குகிறது. பிஎஸ்என்எல் எஸ்டிவி_247 திட்டமானது பெயருக்கு ஏற்றாற்போல் ரூ.247 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் பெறுவீர்கள். இந்த திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் மொத்தம் 50 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டம் பிஎஸ்என்எல் டியூன்ஸ் மற்றும் ஈராஸ் நவ் சேவைகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா

ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா

பிஎஸ்என்எல்-ன் ரூ.300க்கு கீழ் கிடைக்கும் சிறந்த திட்டமாக எஸ்டிவி_298 திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை பெறுவீர்கள். இந்த திட்டம் ரூ.298க்கு 56 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் கூடுதல் பலன்களாக 56 நாட்களுக்கு ஈரோஸ் நவ் சலுகைகள் வழங்கப்படுகிறது. ரூ.300-க்கும் குறைவான விலையில் கிடைக்கும் மற்றொரு திட்டம் ரூ.299 திட்டமாகும். ரூ.299 விலையில், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

டேட்டாசுனாமி ரீசார்ஜ் திட்டம்

டேட்டாசுனாமி ரீசார்ஜ் திட்டம்

இந்தத் திட்டங்களைத் தவிர, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சில டேட்டா ஃபோகஸ்ட் திட்டங்களையும் வழங்குகின்றன. இந்தத் திட்டங்களில் முதலாவது எஸ்டிவி_97 ஆகும். ரூ.97-க்கு 18 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினசடி 2 ஜிபி டேட்டாவை. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. பிஎஸ்என்எல்-ன் டேட்டாசுனாமி_98 திட்டமானது 22 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. ரூ.98-க்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Offers at Prepaid Recharge Plan at Below Rs.300 With Daily Data, Voice Calling and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X