ரொம்ப ரொம்ப கம்மி- 30 நாட்கள் வரை வேலிடிட்டி: பிஎஸ்என்எல் வழங்கும் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்கள்!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு விலைப் பிரிவில் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. ஜியோ, ஏர்டெல், விஐ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஒரு பாதையில் பயணித்தால் அரசு நடத்தும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வேறு பாதையில் பயணிக்கிறது. காரணம் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி அறிமுகம் செய்ய தயாராகி வரும் இந்த நேரத்தில் பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் விரைவில் 4ஜி என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறது. இருப்பினும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலை திட்டங்களை வழங்கி வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்

மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்

மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தை விரும்பும் பயனர்கள் தேர்ந்தெடுக்கும் தொலைத் தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல் தான். பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்கவில்லை என்ற காரணத்தால் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இணையான விலையை அதனால் நிர்ணயம் செய்ய முடியவில்லை. இதன்காரணமாக பிஎஸ்என்எல் மலிவு விலையில் திட்டங்களை வழங்குகிறது. இருப்பினும் 4ஜி சேவை இல்லை என்ற காரணத்தால் பல பயனர்கள் பிஎஸ்என்எல் சிம்கார்டை இரண்டாம் நிலை சிம் ஆக பயன்படுத்தவே விரும்புகின்றனர். மறுபுறம் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்கக் கூடிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பிஎஸ்என்எல் மட்டுமே சிறந்த தேர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு

1ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு

பிஎஸ்என்எல் வழங்கும் பட்ஜெட் விலை திட்டம் குறித்து பார்க்கையில், பிஎஸ்என்எல் நிறுவனம் STV_49 என்று அழைக்கப்படும் ரூ.49 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த திட்டமானது 1ஜிபி டேட்டா மற்றும் 100 நிமிட குரல் அழைப்பு நன்மைகளுடன் 20 நாட்கள் வேலிடிட்டியைக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தில் அதிக டேட்டா வழங்கப்படவில்லை என்ற காரணத்தால் இரண்டாம் நிலை சிம் கார்டாக பிஎஸ்என்எல் பயன்படுத்துபவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

14 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1ஜிபி டேட்டா

14 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1ஜிபி டேட்டா

கூடுதல் தரவு தேவைப்படும் பட்சத்தில் பிஎஸ்என்எல் STV_87 திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். STV_87 என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் விலை ரூ.87 ஆகும். இந்த திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டாவை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. தினசரி 1 ஜிபி டேட்டா வரம்பு முடிந்த உடன் 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. கூடுதலாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்-களும் வழங்கப்படுகிறது. டேட்டா தேவையில்லை குரல் அழைப்பு மட்டுமே தேவை என்ற பட்சத்தில் STV_99 திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 22 நாட்கள் முழுமையான வேலிடிட்டியுடன் வருகிறது.

பிஎஸ்என்எல் ரூ.147 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.147 ரீசார்ஜ் திட்டம்

மாதாந்திர திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால் STV_147 திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். STV_147 என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் விலை ரூ.147 ஆகும். இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புடன் 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

தினசரி 2 ஜிபி டேட்டா

தினசரி 2 ஜிபி டேட்டா

ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை, அதிக ஸ்ட்ரீமிங் போன்ற தேவைகளுக்கு அதிக டேட்டா தேவைப்படும் பட்சத்தில், பிஎஸ்என்எல் ரூ.229 ரீசார்ஜ் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை பெறலாம். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர இந்த திட்டத்தில் மற்றொரு முக்கிய நன்மையும் உள்ளது. அதாவது இந்த ரூ.229 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் பிரீமியம் கேம்களுக்கான அணுகலைப் பெறலாம்.

90 நாட்கள் வேலிடிட்டி

90 நாட்கள் வேலிடிட்டி

பிஎஸ்என்எல் எஸ்டிவி-499 திட்டமானது ரூ.499 விலையில் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த திட்டம் எந்தவொரு OTT சந்தாவையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
BSNL Offers affordable Recharge plans to Keep Your Budget

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X