கூடுதல் சலுகையை வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது. அதாவது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.
அதேபோல் இந்த பிஎஸ்என்எல் நிறுவனம் சில திட்டங்களில் கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம்
தற்போது டெலிகாம்டாக் வலைத்தளம் வெளியிட்ட தகவலின்படி, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 திட்டத்தில் கூடுதல் நன்மைகிடைக்கிறது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் என்று கூறப்படுகிறது.ஆனால் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு இப்போது கூடுதலாக 60 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 425 நாட்கள் வேலிடிட்டி-ஐ பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை பெறமுடியும். எனவே இந்த திட்டத்தில் அதிக டேட்டா நன்மையை பெறமுடியும். இதுதவிர ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் உள்ளன. அதேபோல் இலவச BSNL ட்யூன்கள் மற்றும் ஓவர்-தி-டாப் (OTT) தளமான Eros Nowக்கான அணுகலை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

அதேபோல் ஜியோவின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஜியோ ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள். மேலும் பிஸ்என்எல் நிறுவனம் வழங்கும் கம்மி விலை ப்ரிபெய்ட்திட்டங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நுகர்வுக்குப் பிறகு, இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும் .

பிஎஸ்என்எல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் எஸ்டிவி 499 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்துடன் ஜிங் மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களின் கூடுதல் நன்மைகளையும் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் STV_WFH_599 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் STV_WFH_599 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 5ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நுகர்வுக்குப் பிறகு, இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் ஜிங்கின் கூடுதல்நன்மைகள் உள்ளன.
News Source: telecomtalk.info


Click it and Unblock the Notifications