Home
News

BSNL-க்கு நேரம்தாம்ல.. ரூ.200-க்கு கம்மி.. 70 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. இனி குஷிதான்!

பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டு வைத்திருந்தால் போதும்பா, அடிமட்ட விலைக்கு ரீசார்ஜ் செய்யலாம் என்று அடித்து சொல்லும்படி இந்த 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்களில் கிடைக்காத சிம் ஆக்டிவ் திட்டமாக (SIM Active Plan) இது இருக்கிறது. ரூ.200-க்கும் கம்மியான விலைக்கு கிடைக்கும் இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்வோம்.

இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், விலையானது நம்ப முடியாத அளவுக்கு கம்மியாக இருக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daliy Data) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் (Daliy SMS) சலுகையில் வித்தியாசங்கள் இருக்கின்றன. இதுபோன்ற திட்டங்களை மற்ற டெலிகாம் கஸ்டமர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.

BSNL-க்கு நேரம்தாம்ல.. ரூ.200-க்கு கம்மி.. 70 நாட்கள் வேலிடிட்டி!

அதாவது, இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது, சிம் ஆக்டிவ் திட்டத்தின் சலுகைகளை வழங்கும். ஆகவே, சலுகைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால கெடு இருக்கும். அதன்பிறகு வேலிடிட்டி தொடர்ந்து கிடைக்கும். இந்த வேலிடிட்டி மூலம் சிம் ஆக்டிவை தொடர்ந்து பெற்று கொள்ளலாம். ஆனால், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் தொடர்ந்து கிடைக்காது.

பிஎஸ்என்எல் ரூ 197 திட்டம் 70 நாட்கள் வேலிடிட்டி (BSNL Rs 197 Plan 70 Days Validity): முன்பே சொன்னதை போல இந்த திட்டத்துக்கு மொத்தமாக 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் 70 நாட்களுக்கும் கிடைக்காது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு முதல் 15 நாட்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கிறது. இருப்பினும், இந்த சலுகைகள் நன்றாகவே இருக்கின்றன.

ஆகவே, முதல் 15 நாட்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் நேஷனல் ரோமிங் வாய்ஸ் கால்கள் (National Roaming Voice Calls) சலுகைகளை கஸ்டமர்கள் பெறலாம். அதேபோல நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை 15 நாட்களுக்கு பெற்று கொள்ளலாம். இந்த 15 நாட்கள் வேலிடிட்டியில் 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்தினால் போஸ்ட் டேட்டா உள்ளது.

ஆகவே, 30 ஜிபி டேட்டா மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா (Post Data) பெற்று கொள்ள முடிகிறது. அதே நாட்களில் 100 எஸ்எம்எஸ்களின் சலுகையும் கிடைக்கும். ஆகவே, இந்த 15 நாட்களுக்கு மேலே பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதற்கு பிறகு வரும் நாட்களுக்கு சிம் கார்டு மட்டுமே ஆக்டிவாக இருக்கும். இதில் இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு முழுமையாக 4ஜி சேவை கிடைக்கும் வரையில் அவர்கள் மற்ற நிறுவனங்களுக்கு மாறாமல் இருக்க, சிம் ஆக்டிவ் திட்டங்களை இவ்வளவு மலிவான விலைக்கு பிஎஸ்என்எல் கொடுக்கிறது. இதே விலையில் மற்ற நிறுவனங்களில் எந்தவொரு திட்டமும் எப்போதும் கிடைக்காது. ஆனால், மற்ற நிறுவனங்கள் 4ஜி சேவையில் திட்டங்களை கொடுக்கின்றன.

பிஎஸ்என்எல் நிறுவனம், இதுவரையில் காணாத கஸ்மடர்களின் வருகை பெற்று வருகிறது. மற்ற நிறுவனங்களில் மாதத்துக்கு செய்யும் செலவில், இங்கு 2 மாதத்துக்கு சலுகைகளை பெற்று கொள்ள முடிகிறது. இதனாலேய கஸ்டமர்கள் பிஎஸ்என்எல்லுக்கு மாற தொடங்கி இருக்கின்றனர். பிஎஸ்என்எல் 4ஜி சேவை வந்துவிட்டால், மற்ற நிறுவனங்களுக்கு பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
BSNL Offers 70 Days Validity At Rs 197 Prepaid Plan With Unlimited Voice Calls 2GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X